• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி முகாம்

October 21, 2022 தண்டோரா குழு

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி முகாம்உயர்கல்வி படிப்பிற்கு செல்லாத 49 மாணக்கர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டன.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி முகாம் ஆட்சியர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சியர் சமீரன் தெரிவித்ததாவது:

நான்‌ முதல்வன்‌ திட்டத்தின்‌ சிறப்பம்சமாக அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின்‌ தனித்‌ திறமைகளை அடையாளம்‌ கண்டு அதனை ஊக்குவிப்பது ஆகும்‌. அடுத்தடுத்து அவர்கள்‌ என்ன படிக்கலாம்‌, எங்கு படிக்கலாம்‌, எப்படிப்‌ படிக்கலாம்‌ என்றும்‌ வழிகாட்டப்படுகிறது‌. தமிழில்‌ தனித்‌ திறன்‌ பெற சிறப்புப்‌ பயிற்சியுடன்‌ ஆங்கிலத்தில்‌ எழுதவும்‌, சரளமாகப்‌ பேசுவதற்கும்‌, நேர்முக தேர்வுக்கு தயாராவது குறித்தும்‌ பயிற்சிகள்‌ வழங்கப்படுகிறது.

10 மற்றும் 12 வகுப்பு படித்து குறைவான ஊதியத்தில் வேலைவாய்ப்பு பெறுபவர்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் உயர்கல்வி பயிலும்போதும் அவர்கள் ஒரு தொழில் முனைவோர்களாக உயர தகுதியுடையவராக இருப்பார்கள். எனவே மாணவர்களின் நல்வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் உயர்கல்வி படிப்பிற்கு செல்லாத மாணக்கர்கள் உயர்கல்வி பயில்வதற்கான வழிகாட்டுதல் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக இம்முகாமில் 49 மாணக்கர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

இம்முகாமில் உயர்கல்வி பயில்வதற்கு 16 பேரும், திறன்மேம்பாட்டு பயிற்சிக்கு 18 பேரும், வழக்கறிஞர் படிப்பிற்கு ஒருவரும், ஐ.டி.ஐ படிப்புக்கு 2 பேரும், திறன் பயிற்சிக்கு 5 பேரும் உடனடியாக விண்ணப்பித்தனர். மேலும் 7 பேருக்கு பொறியியல், செவிலியர் படிப்புக்கும், நீட் தேர்வு பயிற்சிக்கும் தேவையான வழிகாட்டுதல் வழங்கப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இளைஞர்கள்‌ வளர்ந்துவரும்‌ தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தங்களது தனித்திறன்களை வளர்த்துக்‌ கொள்ளும்‌ வகையில்‌ கல்லூரியில்‌ பயிலும்‌ மாணவ, மாணவியர்களுக்கு இன்றைய தொழில்நுட்பம் தொடர்பாக பல்வேறு பயிற்சி வகுப்புகள்‌ வழங்கப்படுகிறது. மாணவ, மாணவியர்களின்‌ தகுதி மற்றும்‌ ஆர்வத்திற்கு ஏற்ப நாட்டின்‌ தலைசிறந்த நிறுவனங்கள்‌, புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள்‌ மற்றும்‌ திறன்‌ மேம்பாட்டு நிறுவனங்களில்‌ சேர்க்கைக்கு இந்த நான்‌ முதல்வன்‌ திட்டம்‌ மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்‌.

இவ்வாறு தெரிவித்தார்.

இம்முகாமில் முதன்மை கல்வி அலுவலர் பூபதி, பாரதியார் பல்கலைகழக நான் முதல்வன் திட்ட செயலாக்க அலுவலர் விமலா, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவன உதவி இயக்குநர் வளர்மதி, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் முதல்வர் ராஜன், மாவட்ட முன்னோடி வங்கி, முதுநிலை மேலாளர் கணேஷ், கல்லூரி கல்வி உதவி இயக்குநர் ஈஸ்வரன் மற்றும் மாணவ மாணவியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க