October 21, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்ட தொழில் மைய மின் மருத்துவ கருவிகள் மைய அலுவலகத்தால் பயன்படுத்தப்பட்டு கழிவு நீக்கம் செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனம் வரும் 28-ம் தேதி காலை 11 மணிக்கு அவிநாசி சாலையில் அமைந்துள்ள மண்டல ஆய்வுக்கூடம், சித்ரா அலுவலகத்தில் வைத்து பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:
இந்த வாகனத்தினை ஏலம் எடுக்க விரும்புவோர் வரும் 25ம் மற்றும் 26ம் தேதி ஆகிய 2 தினங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மண்டல ஆய்வு கூடம், அவினாசி சாலை அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்தினை நேரில் பார்வையிடலாம்.
மேலும் ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் வரும் 27ம் தேதி மாலை 11 மணிக்குள் தங்களது ஆதார் அடையாள அட்டையுடன் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.5 ஆயிரம் முன் பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அதிகபட்ச ஏலத்தொகை கோருபவர்கள் ஏலத் தொகையுடன், சரக்கு மற்றும் சேவை வரி கட்டணமாக 18 சதவீதம் சேர்த்து முழு தொகையையும் உடனடியாக செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம்.
ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றியிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு கோவை டவுன்ஹால் மணிக்கூண்டு பின்புறம் அமைந்துள்ள மாவட்ட தொழில் மைய அலுவலத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கூறினார்.