October 26, 2022
தண்டோரா குழு
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான 5 பேருக்கு 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் கடந்த 23ம் தேதி காரில் காஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். இதற்கிடையில் இந்த வழக்கில் தொடர்புடைய முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகிய 5 பேரை கடந்த 24ம் தேதி இரவு தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான 5 பேருக்கு 3 நாள் போலீஸ் காவல் விடுத்து கோவை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி ராஜசேகர் உததரவிட்டார். போலீஸ் தரப்பில் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்து இருந்த நிலையில் 3 நாட்களுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.