• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பில்லூர் 3ம் குடிநீர் திட்டம் பணிகள் 97 சதவீதம் நிறைவு

October 31, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் செயல்படுத்த உள்ள பில்லூர் 3ம் குடிநீர் திட்டம் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 100 வார்டுகளில் நாள் ஒன்றுக்கு 265.70 எம்.எல்.டி குடிநீர் தேவைப்படுகிறது. கோவை மாநகராட்சியின் குடிநீர் தேவையை சிறுவாணி, ஆழியாறு, பில்லூர் உள்ளிட்ட அணைகள் பூர்த்திசெய்து வருகின்றன.கேரளா அரசு சார்பாக சிறுவாணி அணை பகுதியில் இருந்து 70 எம்.எல்.டி. வரை நீர் திறக்கப்படுகிறது.

இதுதவிர, பில்லூர் மற்றும் ஆழியாறு திட்டங்களிலிருந்து தற்போது 150 முதல் 170 எம்எல்டி குடிநீர் பெறப்பட்டு விநியோகம் நடைபெற்று வருகிறது. அத்துடன் மாநகராட்சி பகுதியில் தற்போதுள்ள 2042 ஆழ்குழாய் கிணற்றில் இருந்து குடிநீர் அல்லாத உபயோகங்களுக்கும் கிணற்று நீர் வழங்கப்பட்டு வருகிறது.சிறுவாணி அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டால் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் தட்டுப்பாடின்றி செய்ய முடிகிறது. ஆனால் சிறுவாணி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைந்தால் குடிநீர் தட்டுப்பாடு அதிகரிக்கிறது.

கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும்போது சிறுவாணி அணை நீர்மட்டம் வெகுவாக உயரும்.பில்லூர் 3-வது கூட்டு குடிநீர் திட்டப்பணி 97 சதவீதம் நிறைவடைந்துள்ளது. அது,செயல்பாட்டுக்கு வரும்பட்சத்தில் மாநகரில் குடிநீர் பிரச்னையே இருக்காது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோவை மாநகராட்சியில் பொதுமக்களுக்கு சிறுவாணி, பில்லூர் கூட்டு குடிநீர் திட்டம் 1, 2 மற்றும் வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டம், குறிச்சி குடிநீர் திட்டம் ஆகிய திட்டங்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் மாநகராட்சிக்கு ஒரு நாளைக்கு சுமார் 23 கோடி லிட்டர் குடிநீர் கிடைத்து வருகிறது. ரூ.779 கோடியில் பில்லூர் குடிநீர் திட்டமும் 3 செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மேட்டுப்பாளையம், நெல்லிதுறை ஊராட்சி, மருதூர் ஊராட்சி, தண்டிபெருமாள்புரம் ஆகிய இடங்களில் நீரேற்றும் நிலையம் உள்பட பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் கோவை மாநகராட்சி பகுதிக்கு கூடுதலாக 178 எம்.எல்.டி. அதாவது 17 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கும். இதனால் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க முடியும். மேட்டுப்பாளையம் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும் பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, ராட்சத குழாய்கள் மூலம் நீரேற்றும் நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது. குழாய்களை கொண்டு வரும் வழியில் தண்டிபெருமாள்புரம் பகுதி அருகே கட்டாஞ்சி என்ற மலை உள்ளது. 3வது குடிநீர் திட்டத்துக்கு இந்த மலையில் குகை அமைத்து ராட்சத குழாய்கள் அமைக்க 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரூ.61 கோடியே 35 லட்சத்தில் 900 மீட்டர் தூரத்துக்கு மலையை குடைந்து குகை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டது.

இந்த பணியை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் உள்ள முக்கிய திட்டங்களை செய்யும் பிரிவு மேற்கொண்டது. அதன்படி கட்டாஞ்சி மலையில் சுரங்கம் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பில்லூர் 3-வது குடிநீர் திட்டம் விரைந்து செயல்படுத்தப்படுகிறது. இதற்காக கட்டாஞ்சி மலையில் தண்ணீர் செல்லும் குகை அமைக்கும் பணி 99 சதவீதம் வரை முடிந்து விட்டது. மேலும் நெல்லித்துறையில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்த குடிநீர் திட்டத்திற்காக 90 கிலோ மீட்டர் தூரத்திற்கு குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட வேண்டும். இதில் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள குழாய் பதிப்பு பணிகள் விரைந்து முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க