• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலகத்திலேயே பெரிய கரகாட்ட கோஸ்டி அண்ணாமலை தான் – அமைச்சர் செந்தில் பாலாஜி

November 1, 2022 தண்டோரா குழு

கோவை ராமநாதபுரம் பகுதியில் நடைபெற்ற நகர சபை கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

கோவை மாநகராட்சியில் நூறு 100 வார்டுகளிலும் 846 பகுதி சபை அமைக்கப்பட்டு பொது மக்களின் குறைகள் கேட்டறியப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள 80 அடி சாலையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நகர சபை கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.இதில் பொதுமக்கள் தங்களின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் மனுக்களை அமைச்சரிடம் வழங்கினர்.இதற்கு முன்னர் பொதுமக்கள் மத்தியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி பேசும்போது.

இந்த நகர சபை கூட்டங்கள் மூலம் பொது மக்கள் கோரிக்கைகளை குறைகளை கேட்டு அறிந்து அரசு செயல்படுத்த வேண்டும் என்று சீரிய நோக்கத்தோடு தமிழக முதல்வர் அரசாணை வெளியிட்டார்.கோவையில் 846 பகுதி சபா அமைக்கப்பட்டு மக்கள் சபை கூட்டம் நடந்து வருகிறது.12 மாதத்தில் ஆறு கூட்டம் நடைபெற்றுள்ளது.

முதல்வர் கோவையில் 25,000 மனுக்களுக்கு உத்தரவை வழங்கினார். முதல்வரால் 200 கோடிக்கு கோவைக்கு சிறப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது. 211 கோடிக்கு பணிகள் நடைபெற்றுள்ளது.ஒன்னரை ஆண்டில் வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.கோவைக்கு இன்னும் பல திட்டங்கள் முதல்வர் வழங்க உள்ளார்.

முதல்வர் கோவையில் 10 தொகுதியிலும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் இருந்தாலும் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி பார்க்காமல் திட்டங்கள் செயல்பட நடவடிக்கை எடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து நிகழ்ச்சி நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த அவர். கோவையில் 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு முதல்வரால் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.அனைவரும் 24 மணி நேரமும் பணி செய்ய தயாராக உள்ளனர்.
மின்வாரியமும் தயார் நிலையில் உள்ளது. பிஜேபியின் மாநில தலைவர் அரசியல் கோமாளியின் செய்திகளை என்னிடம் தவிர்க்க வேண்டும்.உலகத்திலேயே பெரிய கரகாட்ட கோஸ்டி அவர்.தொலைக்காட்சிகளில் கோமாளியின் செய்திகள் தான் முதலில் வருகிறது.நாங்கள் கோமாளி சொன்னது போல ஏதாவது கருத்து சொல்லி உள்ளோமா..?
பத்திரிக்கையாளர்கள் மீது அக்கறை கொண்ட அரசு தற்போதைய தமிழக அரசு இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் படிக்க