• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை இந்திய தொழில் வர்த்தக சபை – தேசிய உற்பத்தி குழு இடையே ஒப்பந்தம் கையெழுத்து

November 5, 2022 தண்டோரா குழு

கோவை மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் தைவான் தொழில்நுட்பத்தின் மூலம் பசுமை தொழில் வளர்ச்சியை மேற்கொள்ள தேசிய உற்பத்தி குழு – கோவை, இந்திய தொழில் வர்த்தக சபை இடையே இன்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் தைவான் பசுமை தொழில்புரட்சி, மாசு கட்டுப்பாடு, கழிவு நீர் சுத்திகரிப்பு, மின்சார வாகனங்கள் பயன்பாடு, சாப்ட்வேர் கிளவுட் தொழில்நுட்பம், பருவ கால மாற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் நிபுணத்துவம் வாய்ந்த தொழில்நுட்பங்கள் கோவை மாவட்டத்திற்கு கிடைக்க இருக்கிறது.
பசுமையான தொழில் வளர்ச்சியை எப்படி உருவாக்குவது என்பது குறித்து 8 பேர் கொண்ட உயர்மட்ட தொழில்துறை குழு தைவானில் இருந்து கோவை வந்துள்ளது.

இந்திய தொழில் வர்த்தக சபை மற்றும் தேசிய உற்பத்தி குழு மற்றும் ஒன்றிய அரசின் கூட்டு முயற்சியால் கோவை மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் பசுமை தொழிலாக்க அபிவிருத்தி செய்வது எப்படி என்ற ஆலோசனை இன்று இந்திய தொழில் வர்த்தக சபை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சந்தீப் நாயக் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய கோவை, இந்திய தொழில் வர்த்தக சபை ஸ்ரீராமுலு, கோவையைப் பற்றியும், கோவையின் சிறப்புகள் பற்றியும் பேசினார்.

மேலும் அவர் பேசுகையில்,

பிரதமர் மோடியின் ஆலோசனைப்படி, இந்தியா முழுவதும் பசுமைத் தொழில் நிறுவனங்கள் வளர வேண்டும், அப்படியென்றால், எரிபொருள் உற்பத்தியை குறைவாக உபயோகித்து, எப்படி மின்சாரம் தயாரிப்பது, மாசு இல்லாத தொழிற்சாலைகளை அமைப்பது, கழிவு நீரை மீண்டும் பயன்படுத்துதல், மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிப்பது, காற்றில் பரவும் மாசை எப்படி கட்டுப்படுத்துவது, கழிவு நீரை சுத்திகரிப்பது போன்ற பல திட்டங்களை அதற்கான தொழில்நுட்பங்களை தைவான் நாட்டு தொழில்நுட்ப வல்லுனர்கள் கோவைக்கு வழங்க தயாராக இருப்பதாகவும், அதற்காக கோவை, இந்திய தொழில் வர்த்தக சபை மற்றும் தேசிய உற்பத்திக் குழு இணைந்து இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இந்த ஒப்பந்தம் மூலமாக கோவை தொழில் அதிபர்கள், புதிய தொழில் முனைவோர், அதிக சக்திவாய்ந்த தொழில்நுட்பங்களை தைவான் நாட்டில் இருந்து பெற முடியும். மேலும் நமது பொருட்களை தைவான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யவும், தைவான் நாட்டு தொழில்நுட்பங்களை நமது தொழிற்சாலைகளில் பயன்படுத்தவும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது. இதை கோவையில் உள்ள தொழில் அதிபர்களும், தொழில் துவங்க உள்ளவர்களும் பயன்படுத்தி கோவையை பசுமை வாய்ந்த தொழில் நகரமாக மாற்ற வேண்டும் என்றும், அதற்கான முழு ஒத்துழைப்பை கோவை, இந்திய தொழில் வர்த்தக சபை வழங்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து தேசிய உற்பத்தி குழு தலைவர் சந்தீப் நாயக் பேசுகையில், கோவை மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் தற்போது மற்றும் புதிதாக தொழில் துவங்க உள்ளவர்களுக்கு மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும், இந்த புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கோவை நகரை மாசில்லா நகரமாக மாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இதில் தேசிய உற்பத்தி குழு தலைவர் சந்தீப் நாயக், தைவான் நாட்டைச் சேர்ந்த தேசிய உற்பத்தி குழு இயக்குனர் ஷெர்லின் லின் மற்றும் அவருடன் 8 பேர் கொண்ட தைவான் நாட்டைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் உள்ளிட்ட ஏராளமான பேர் பங்கேற்றனர்.

மேலும் இக்குழுவினர் இந்த பகுதியில் தொழில் துவங்கவிருக்கும் தொழில்முனைவோருக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க இருக்கிறார்கள். இதன் மூலம் கோவை மாவட்டமும், அதைச் சுற்றி உள்ள பகுதிகளும் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் தொழிலை மேற்கொள்ள முடியும். எரிசக்தி, மாசுக் கட்டுப்பாடு, கழிநீர் சுத்திகரிப்பு, கிளவுட் தொழில்நுட்பம் உள்ளிட்ட அவர்களின் பல்வேறு தொழில்நுட்பங்களை இங்கு பயன்படுத்த இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.

இந்த நிகழ்ச்சியில் தைவான் தொழில் அதிபர்களும், கோவையைச் சேர்ந்த பல்வேறு தொழில் அதிபர்களும் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியின் முடிவில் கோவை, இந்திய தொழில் வர்த்தக சபை செயலர் அண்ணாமலை நன்றி கூறினார்.

மேலும் படிக்க