November 7, 2022 தண்டோரா குழு
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை குழந்தைகளின் சிகிச்சைக்கு உதவ ‘இதயங்கள் அறக்கட்டளைக்கு’ ‘ரெப்கோ ஹோம் பைனான்ஸ்’ நிறுவனம் 25 லட்சம் ரூபாய் வழங்கியது.
‘முதல் வகை’ சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஏழை குழந்தைகளின் மருத்துவ செலவுக்கு உதவும் வகையில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் சார்பில் கார்ப்பரேட் சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இதயங்கள் அறக்கட்டளைக்கு 25 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி எதிரே டாக்டர் ஜெகநாதன் நகரில் அமைந்துள்ள இதயங்கள் அறக்கட்டளையின் அலுவலகத்தில் இன்று காலை நடந்த நிகழ்ச்சியில், ‘ரெப்கோ ஹோம் பைனான்ஸ்’ நிறுவனத்தின் மண்டல மேலாளர் முரளிதரன், உதவி பொது மேலாளர் சிஜு, உள்ளிட்டோர் இதயங்கள் அறக்கட்டளை நிறுவன தலைவர் டாக்டர். கிருஷ்ணன் சுவாமிநாதனிடம் காசோலையை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் இதயங்கள் அறக்கட்டளை சார்பில் மருத்துவ உதவி பெறும் ஏழை குழந்தைகளுக்காக ‘ரெப்கோ ஹோம் பைனான்ஸ்’ நிறுவனத்தின் மண்டல மேலாளர் முரளிதரன் பேசுகையில் எங்கள் நிறுவனத்தின் முன்னாள் சேர்மன் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தலைமையில் மற்றும் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி சுவாமிநாதன், அனிதா சீனிவாசன் கார்ப்பரேட் சமூக மேம்பாடு திட்டத்தின் கீழ் பல்வேறு உதவிகளை இந்த நிறுவனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதில் மருத்துவர்கள், நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.