• Download mobile app
13 Dec 2025, SaturdayEdition - 3594
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தின் அனைத்து மாநகராட்சி அலுவலர்கள் தொடர் போராட்டம் அறிவிப்பு

November 7, 2022 தண்டோரா குழு

தமிழக அரசு அண்மையில் நகராட்சி நிர்வாகத்துறை சார்பாக வெளியிட்ட பணியிடங்கள் குறைப்பு உள்ளிட்ட புதிய அரசாணையை எதிர்த்து, தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி அலுவலர்கள் தொடர் போராட்டம் நடத்த உள்ளதாக மாநகராட்சி சங்கங்களின் கூட்டமைப்பினர் கோவையில் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் சென்னை நீங்களாக உள்ள 20 மாநகராட்சிகளில் உள்ள 20 வகை பணியிடங்களில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை 3417 பணியிடங்களாக குறைத்து தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்துறை கடந்த அக்டோபர் மாதம் அரசானை பிறப்பித்து இருந்தது.

இந்நிலையில் இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு அரசு அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் கோவையில் நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இதில்,மாநில பொதுச்செயலாளர் சீத்தாராமன் கோவை மண்டல செயலாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோவை மாநகராட்சி கூட்டமைப்பின் தலைவர் பரமசிவன் அனைவரையும் வரவேற்று பேசினார்.முன்னதாக கூட்டமைப்பின் தலைவர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர்,

இந்த செயற்குழு கூட்டத்தில் தமிழக அரசின் புதிய அரசாணையை எதிர்த்து மூன்று கட்ட போராட்டங்கள் நடத்த உள்ளதாகவும், இதில் முதல் கட்டமாக அனைத்து மாநாகராட்சி அலுவலகங்கள் முன்பாக வாயிற் கூட்டம் நடத்தி முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் மாநகராட்சி மேயர் துணை மேயர் ஆணையாளர்கள் ஆகியோரிடம் மனு கொடுக்க இருப்பதாகவும் இரண்டாவது கட்டமாக சென்னையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கூடுதல் தலைமைச் செயலாளர் நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆகியோரை சந்தித்து அரசாணையை ரத்து செய்ய மனு வழங்க இருப்பதாகவும் மூன்றாவது கட்டமாக இதில் ஏதும் பயனில்லை என்றால் தமிழகத்தின் 20 மாநகராட்சிகளிலும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாநகராட்சிகளை சேர்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க