November 9, 2022 தண்டோரா குழு
இரத்தினம் குழுமத்தின் 50ம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இவ்விழாவில்
தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டார்.
இந்நிகழ்வில் 50 வது ஆண்டு பொன்விழா நினைவுத் தூண்,புத்தாக்க மற்றும் வடிவமைப்பு சிந்தனை ஆய்வகம் மற்றும் பொன்விழா நினைவுக் கட்டிடம் ஆகியவை அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.மேலும்,இரத்தினம் குழுமத்தின் பொன்விழா நினைவு இதழினை வெளியிட்டார்.
பொன்விழா நினைவு இதழினை தமிழக அமைச்சர் வெளியிட இரத்தினம் குழுமங்களின் தலைவர் டாக்டர் மதன் ஏ செந்தில் , இரத்தினம் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியின் தாளாளர் ஷிமா செந்தில் இரத்தினம் கல்விக் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் மாணிக்கம் , இரத்தினம் குழுமங்களின் இயக்குநர் டாக்டர் நாகராஜ் பாலகிருஷ்ணன் மற்றும் இரத்தினம் கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோர் பெற்றுக் கொண்டார்.
இவ்விழாவில் பேசிய அமைச்சர்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி ,
தமிழகத்தில் உயர்தரக் கல்வியை பல கல்வி நிறுவனங்கள் வழங்கி வருகிறது. அவற்றில் இரத்தினம் கல்வி குழுமம் ‘ குறிப்பிடதக்க ஒன்று எனக் குறிப்பிட்டார் . மேலும் , 50 வது ஆண்டு கொண்டாட்டத்தில் தாம் கலந்து கொண்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் , இரத்தினம் குழுமங்களின் தலைவர் டாக்டர் மதன் ஏ செந்தில் தலைமையுரை வழங்கினார்.இரத்தினம் கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி வரவேற்புரை வழங்கினார். மேலும் இக்கொண்டாட்டத்தின் மற்றுமொரு நிகழ்வாக கோவை மாநகரின் வளர்ச்சிக்கு தங்களது சாதனைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் மூலம் பங்களித்த கோவை குடிமக்களை அங்கீகரிக்கும் வகையில் ஐகான்ஸ் ஆஃப் கோயம்புத்தூர் என்ற விருது வழங்கப்பட்டது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் நாராயணன் ஜெகதீசன் , மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட் – இன் தலைமை நிர்வாக அதிகாரி த மாதம்பட்டி ரெங்கராஜ் ரூட்ஸ் குழுமத்தின் நிர்வாகத் தலைவர் கே.ராமசாமி , ஆட்டிஸத்திற்கான சிறப்பு மையமான தேர்டு ஐ மையத்தின் துணைத் தலைவர் சரண்யா ரெங்கராஜ் பின்னணிப் பாடகர் சத்ய பிரகாஷ் , தி ஐ பவுண்டேஷனின் நிறுவனர் டாக்டர் ஆர்ராமமூர்த்தி ஜூசி கெமிஸ்ட்ரி நிறுவனத்தின் நிறுவனர் பிரிதேஷ் ஷர் மற்றும் சினிமா குழந்தை நட்சத்திரம் ரித்விக் ஆகியோர் விருதைப் பெற்றவர்கள் மற்றும் இந்த 50 ஆண்டு காலப் பயணத்தில் 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேற்ப்பட்ட ஆண்டுகள் அதிகமான பங்களித்த இரத்தினம் குழுமத்தின் ஊழியர்களுக்கு எபிடோம் ஆஃப் சக்சஸ் என்ற விருது வழங்கப்பட்டது.
மேலும், இரத்தினம் கல்லூரியின் முன்னாள் மாணவர்களின் சாதனைகள் மற்றும் வெற்றிகளை அங்கீகரிப்பதற்காக சிறந்த முன்னாள் மாணவர் விருது வழங்கப்பட்டது மற்றும் இறுதியாக இரத்தினம் குழுமத்தின் இயக்குநர் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது .