November 22, 2022 தண்டோரா குழு
வருங்கால வைப்பு நிதி உதவி
கமிஷனர் (பென்ஷன்) ஆல்பர்ட் ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஓய்வூதியதாரர்கள் தங்களது கைரேகை அல்லது கருவிழி அடிப்படையில் மின்னணு உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பித்து வந்தனர். ஆனால் சிலருக்கு கைரேகை அல்லது கருவிழி அடிப்படையில் உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடிவது இல்லை.
இதனை அடுத்து ஓய்வூதியதாரர்கள் தங்களது மின்னணு உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிப்பதற்காக மற்றொரு வழிமுறையை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒன்றிய அரசு பென்ஷன் மற்றும் பென்ஷனர் நல்வாழ்வு துறை சார்பாக AadhaarFaceRd APP என்கிற செயலியை உருவாக்கி உள்ளது. ஓய்வூதியதாரர்கள் இச்செயலியை தங்களது ஆண்ட்ராய்டு போன் மூலமாக பதிவிறக்கம் செய்து அதன்பின் Jeevan pramaan Face Application என்ற மென்பொருளையும் பதிவிறக்கம் செய்து உரிய காலத்தில் உயிர் வாழ் சான்றிதழை புதுப்பிக்கலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.