November 23, 2022 தண்டோரா குழு
கோவை பி.எஸ்.ஜி. ஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா கல்லூரியில் உள்ள ஆடிட்டோரியத்தில் இன்று நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரியின் தலைவர் டாக்டர் ஆர்.நந்தினி தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்று பேசினார்.விழாவில் தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் உறுப்பினர் செயலர் டாக்டர் ஆர்.சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 2576 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி சான்றிதழ்கள் வழங்கி பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார்.
விழாவில் 2018ம் ஆண்டு யு.ஜி.மாணவிகள் மற்றும் 2019 -ம் ஆண்டு பி.ஜி.மாணவிகள் 2531 மாணவிகளுக்கும், 45 ரேங்க் பெற்ற மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. விழாவில் கல்லூரியின் செயலாளர் டாக்டர் என்.யசோதா தேவி, கல்லூரி முதல்வர் டாக்டர் பி.மீனா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் உறுப்பினர் செயலர் டாக்டர் ஆர்.சீனிவாசன் தனது பட்டமளிப்பு விழா உரையில் பேசும்போது கூறியதாவது:-
இந்தியாவில் தற்போது பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறார்கள். இந்தியாவின் முதல் பெண் விஞ்ஞானி என்ற பெருமையை ஜானகி அம்மாள்பெற்றுள்ளார். அதைத்தொடர்ந்துகல்பனா சாவ்லா சௌமியா சாமிநாதன் போன்ற தங்கள் சொந்த திறமைகளை வளர்த்துமுதன்மை இடத்திற்கு வந்துள்ளனர்.ஆண்களுக்கு பெண் சமம் என்று பாரதி கண்ட கனவைதற்போது நிறைவேற்றி வருவது காண முடிகிறது.தேனி மாவட்டத்தில் இளம் பெண் விவசாயி அர்ச்சனா ஸ்டாலின் என்பவர் இயற்கை விவசாயத்தில் அதிகம் உற்பத்தி செய்து சாதனை புரிந்துள்ளார்.
ஒரு காலத்தில் ஆண் வாரிசுகள் தான் பெற்றோரை காப்பாற்றும் என்ற நிலை இருந்து வந்தது.தற்போது அந்த நிலை மாறிபெண் பிள்ளைகள் தங்களது பெற்றோரைக் காக்கும் நிலை வந்துள்ளது.ஒரு குடும்பத்தில் ஒரு பெண் என்ற நிலை தற்போது வந்துள்ளது. மாணவிகள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொண்டு புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளையும் ஆய்வு செய்து வெற்றி காணவேண்டும். அதை இந்த உலகத்திற்கு நீங்கள் தரவேண்டும்.கல்வி அறிவை மேம்படுத்துங்கள். திட்டமிட்டு செயல்படுங்கள். உலக அறிவை 5 வினாடியில் நீங்கள் தற்போது உள்ள தொழில்நுட்பம் மூலம் அறியமுடிகிறது. தேடுதலை என்றும் விடாதீர்கள். தேடிக்கொண்டே இருக்க வேண்டும். அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று பேசினார்.