January 7, 2017 தண்டோரா குழு
“தமிழகத்தில் மழை வேண்டி கோவையில் புதன்கிழமை சிறப்புத் தொழுகை மேற்கொள்ளப்படும்“ என்று பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்திய அமைப்பினர் தெரிவித்தனர்.
பத்திரிகையாளர் சந்திப்பு சனிக்கிழமை நடைபெற்றது . அதில் தமிழகத்தில் பருவ மழை பொய்த்து விட்ட காரணத்தினால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவலநிலை அதிகரித்து வருகிறது. கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளில் அணைகள் வறண்டுபோய் குடிநீர்த் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
“இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கோவை கோட்டமேடு பகுதியில் “பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” அமைப்பின் சார்பில் நிருபர்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
“இதற்காக தமிழகத்தில் மழை வேண்டி கோவையில் புதன்கிழமை சிறப்புத் தொழுகை மேற்கொள்ளப்படும்” என்று அந்த அமைப்பின் மாவட்ட தலைவா் ஏ. ஷாஹுல் ஹமீது நிருபர்களிடம் சனிக்கிழமை தெரிவித்தார்.
“தமிழகத்திற்கு மழை வேண்டி, கோவை கோட்டை மேடு வின்சென்ட் சாலையில் வரும் 11ம் தேதி புதன்கிழமை காலை 11 மணியளவில் தொழுகை மற்றும் கூட்டுப்பிரார்த்தனை கூட்டம் நடைபெறும். இதில் அனைத்து சமயத்தினரும் கலந்து கொள்ளவுள்ளனர்” என்றார் அவர்.
இந்த நிருபர்கள் கூட்டத்தின்போது அந்த அமைப்பின் கோவை மேற்கு மாவட்ட தலைவா் அன்வா் உசேன், முஜிபுர் ரஹ்மான் எஸ்டிபிஐ மண்டல தலைவா் முஸ்தபா, மக்கள் தொடர்பு அலுவலர் நவ்ஃபல் ஆகியோர் உடன் இருந்தனர்.