December 2, 2022 தண்டோரா குழு
திருமண முகூர்த்தங்களை முன்னிட்டு கோவையில் ஒரே கூரையின் கீழ் இந்திய அளவில் சிறப்பான நகை வடிவமைப்பு மற்றும் பிராண்ட் வகைகளை வாங்குவதற்கான பிரத்யேக ஆசியா ஜுவல்ஸ் ஏசியா கண்காட்சி துவங்கப்பட்டுள்ளது.
ஆசியா ஜூவல்ஸ் ஷோவின் 45 வது பதிப்பாக நகை விற்பனை மற்றும் கண்காட்சி கோவை ரேஸ்கோர்ஸ்சில் உள்ள தாஜ் விவாந்தா ஹோட்டலில் துவங்கியது.டிசம்பர் 2ந்தேதி துவங்கி, மூன்று நாட்கள் நடைபெற உள்ள இந்த விற்பனை கண்காட்சியில்,முற்றிலும் தனித்துவமிக்க கவனமுடன் தேர்வு செய்யப்பட்ட உயர்தமான நகைகள் ஒரே கூரையின் கீழ் இடம் பெற்றுள்ளன.
முன்னதாக நடைபெற்ற இதன் துவக்க விழாவில்,பார்க் குழுமத்தின் தலைமை செயல்அதிகாரி டாக்டர் அனுஷா ரவி, ஜே.ஆர்.டி.குழுமங்களின் தலைவர் ஜே.ராஜேந்திரன்,நிர்வாக இயக்குனர் தீபக் ராஜேந்திரன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்..மிக முக்கியமான இந்த தனித்துவமிக்க கண்காட்சியில் உயர்தர தங்கம் மற்றும் வைர நகைகள் இடம் பெறவுள்ளன. சமீபத்திய நுண் தங்க நகைகள், வைரம், பிளாட்டினம், பாரம்பரிய நகைகள், திருமண நகைகள், ஆன்டிக், அரிய வகை கற்களைக் கொண்ட நகைகள், குந்தன், ஜடாவு, போல்கி மற்றும் வெள்ளி நகைகள் இவற்றில் குறிப்பிடத்தக்கவை.
பெங்களுரு, மும்பை, டில்லி, சென்னை, சூரத், கோவை மற்றும் ஜெய்ப்பூர் இடங்களிலிருந்து நகைகள் கவர்ச்சிகரமான வகையில் உருவாக்கப்பட்டு இடம் பெற்றுள்ளன. சர்வதேச நகை வடிவமைப்புகள், பெயர் பெற்ற நகைகள், நாடு முழுவதிலும் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.