December 3, 2022 தண்டோரா குழு
கோவை புலியகுளம் அடுத்த மீனா எஸ்டேட் பகுதியில்,ஆரோக்யமான உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில் புதிய செயலியின் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த செயலியின் அறிமுக விழாவில் குக்கர் தலைமை செயல் அதிகாரி மற்றும் இணை நிறுவனர் பிரபா சந்தான கிருஷ்ணன் பேசுகையில்,
வீட்டு முறை உணவகளுக்கு எப்பொழுதும் கோவை மக்களிடையே ஒரு நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் அவை அனைத்தும் ஒரே கூறையின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு கிடைப்பதில்லை. இந்த குறையை பூர்த்தி செய்யும் வகையில், இந்த குக்கர் செயலியை கோவையில் இன்று அறிமுகம் செய்து உள்ளதாகவும் இங்கு, தரமான வீட்டு உணவை தயார்படுத்தும் உணவக கலைஞர்களின் கை வண்ணத்தில் தயாராகும் உணவுகளை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் பெண்களின் முன்னேற்றத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களின் தனித்துவமான உணவுகளை வெளி உலகுக்கு கொண்டு வருவதில் குக்கர் ஒரு முன்னோடியாக திகழும் என நம்புவதாக தெரிவித்தார். ஆயிரக்கணக்கான சிறு தொழில் முனைவோர்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன், சேர்ந்து உருவாக்கும் உணவு வகைகளை அனைவருக்கும் மிகைப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த குக்கர் உதவும் என்றார்.
உணவு துறையை மேம்படுத்த அதிநவீன தொழில்நுட்பத்தை பயண்படுத்தி வீட்டு உணவு தயாரிப்பாளர்களிடம் இருந்து தரமான உணவுகளை பெற்று, வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருப்பதாக கூறினார். கிராமத்தின் மனம் இனி நகரத்திலும் நுகரும் வகையில், மண் மணம் மாறாத வீட்டு முறை உணவுகள் ஒவ்வொன்றையும் கொண்டாடி மகிழுங்கள் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் வீட்டு முறை சமையல் என்பதால், உணவுகளை தயார் படுத்த சுமார் ஒரு மணி நேரம் எடுத்து கொள்வதாகவும், கோவையை 6 பகுதிகளாக பிரித்து வாடிக்கையாளர்களுக்கு தேவையான உணவுகளை தயார் படுத்தி வழங்குவதாக தெரிவித்தார். குறிப்பாக இந்த செயலியை டவுன்லோட் செய்பவர்களுக்கு வெல்கம் ஆஃபர் ஆக 100 ரூபாய் வழங்கப்படுகிறது. இதனை முதல் ஆடர்களில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இதை நண்பர்களுடன் பகிர்ந்தால் அவர்களுக்கும் ரூபாய் 100 மற்றும் பகிர்ந்தவர்ளுக்கு ரூ.50 வழங்கப்படும். மேலும் இந்த செயலி தமிழகத்தில் 6 மாவட்டங்களில் துவக்கி உள்ளோம். தொடர்ந்து தென் மாநிலங்களில் துவக்க உள்ளோம் என்றார்.
இந்த துவக்க விழா நிகழ்ச்சியில், குக்கர் இணை நிறுவனர்கள் நிர்மல் குமார், சரவண குமார் கந்தசாமி மற்றும் குக்கர் பொறியாளர் துணை தலைவர் ராமநாதன் மற்றும் குக்கர் நிர்வாகிகள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.