• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கார் விற்பதாக கூறி நூதன முறையில் 31 லட்ச ரூபாய் மோசடி : 3 பேருக்கு போலீஸ் வலை

December 3, 2022 தண்டோரா குழு

சென்னை இசிஆர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் என்பவரின் மகன் மோகன் பாபு( 42). இவர் பழைய கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார் .குறிப்பாக இவர் விலை உயர்ந்த சொகுசு கார்களை வாங்கி விற்பது வழக்கம். இவரிடம் ஏற்கனவே கோவையைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் சொகுசு கார்கள் சிலவற்றை வாடிக்கையாளரிடம் இருந்து வாங்கி விற்றுள்ளார்.

மேலும் மோகன் பாபு வெளியூர்களில் சொகுசு காரர்களை விற்பனை செய்பவர்களிடம் தனது டிரைவரை அனுப்பி காரை சரி பார்ப்பது வழக்கம். பின்னர் காருக்குரிய ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தால் உடனடியாக பணத்தை ஆன்லைன் மூலம் சம்பந்தப்பட்ட கார் உரிமையாளர் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைப்பதும் வழக்கம்.இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் சுப்ரமணியன் கோவையைச் சேர்ந்த வர்ஷினி என்பவருக்கு சொந்தமான பென்ஸ் கார் ஒன்று 32 லட்சம் ரூபாய்க்கு விலைக்கு இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் பொள்ளாச்சிக்கு வந்து காரை பணம் கொடுத்து எடுத்துச் செல்லலாம் என கூறியிருக்கிறார்.இதை தொடர்ந்து மோகன் பாபு தனது டிரைவர் பிரவீன் என்பவரை அனுப்பி காரை பார்த்து விபரங்களை கூறும்படி சொல்லி இருந்தார்.பின்னர் பொள்ளாச்சி வந்த டிரைவர் பிரவீன் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் பொள்ளாச்சியில் உள்ள ஹோட்டலில் வைத்து காரை பார்த்தனர்.தொடர்ந்து பிரவீன் தனது உரிமையாளர் மோகன் பாபுவிடம் அனைத்தும் சரியாக இருப்பதாக கூறி இருக்கிறார். இதை தொடர்ந்து மோகன் பாபு காரின் உரிமையாளர் வர்ஷினி என்பவரின் வங்கி கணக்கிற்கு 31 லட்சம் ரூபாயை அனுப்பி வைத்துள்ளார்.

இதன் பின்னர் பேசிய சுப்பிரமணியன் கார் தற்சமயம் லோனில் இருப்பதாகவும் வங்கியில் அதற்குரிய தொகையை செலுத்தி சில நாட்களில் காருக்குரிய ஆவணங்கள் அனைத்தையும் வங்கியில் இருந்து பெற்று அனுப்பி வைப்பதாகவும் நம்பிக்கையுடன் கூறியிருக்கிறார்.இதை தொடர்ந்து டிரைவர் பிரவீன் காரை எடுத்துக்கொண்டு சென்னைக்கு சென்று விட்டார்.

அதன் பிறகு பலமுறை மோகன் பாபு காரை விற்ற வர்ஷினி மற்றும் அவரது மேலாளர் நவீன் குமார் மற்றும் காரை வாங்கி கொடுத்த சுப்பிரமணியன் ஆகியோரை தொடர்பு கொண்டார்.ஆனால் அவர்கள் சரியான முறையில் பதில் அளிக்காமல் தொடர்ந்து காருக்குரிய ஆவணங்களையும் தராமல் ஏமாற்றி வந்தனர். பின்னர் அவர்கள் குறித்து விசாரித்த போது வர்ஷினி கோவை திருச்சி சாலை கிருஷ்ணா காலனி பகுதியில் உள்ள அப்பார்ட்மெண்டில் குடியிருப்பது தெரிய வந்தது.

காரை வாங்கி கொடுத்த சுப்பிரமணியனிடம் கேட்டபோது தனக்கு ஒன்றும் தெரியாது என பதில் அளித்துள்ளார்.இதை தொடர்ந்து மோகன் பாபு கோவை மாநகர போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து இது குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் வர்ஷினி அவரது மேனேஜர் நவீன் குமார் மற்றும் காரை வாங்கி கொடுத்த சுப்பிரமணியன் ஆகியோர் மூவரும் நூதன முறையில் சொகுசு காரை மட்டும் விற்று விட்டு, அதற்குரிய ஆவணங்களை வங்கியில் வைத்து பல லட்ச ரூபாயை வாங்கிவிட்டு அதனை திருப்பி செலுத்தாமலும் , காரை வாங்கியவருக்கு அதற்குரிய ஆவணங்களை கொடுக்காமல் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் வர்ஷினி, நவீன் குமார், சுப்பிரமணியன் ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க