December 3, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறியிருப்பதாவது:
ஒன்றிய நகர்ப்புற மற்றும் வீட்டுவசதி அமைச்சகத்தின் மூலம் தூய்மை பாரத திட்டம் 2.0-ன்கீழ் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் திறந்தவெளியில் மலம் மற்றும் சிறுநீர் கழித்தல் அற்ற மாநகராட்சி என சான்று பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக விண்ணப்பிக்கவுள்ளது.
பொதுமக்கள் இது குறித்த தங்களின் ஆட்சேபனைகள், கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் 15 நாட்களுக்குள் கோவை மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது எழுத்துப்பூர்வமாகவோ ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனையினை மாநகராட்சி கமிஷனரிடம் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.