January 9, 2017 தண்டோரா குழு
கணக்கில் காட்டப்படாத 4,807 கோடி ரூபாயையும், 112 கோடி மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளையும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 8) பறிமுதல் செய்துள்ளனர்.
இது குறித்து வருமானவரித் துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி முதல் 5௦௦ மற்றும் 1,௦௦௦ ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் மொத்தம் 1,138 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. இது தொடர்பாக 5,184 பெருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
6௦9.39 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் மற்றும் 112 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய 2௦௦௦ ரூபாய் நோட்டுகள் இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கணக்கில் காட்டப்படாத 4,807 கோடி ரூபாயையும், 112 கோடி மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளையும் வருமானவரித் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற பிற விசாரணை அமைப்புகளுக்கு இதுவரை 526 வழக்குகளைப் பரிந்துரை செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.