• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை விமான நிலையத்தில் புதிதாக டெர்மினல் அமைக்க 2000 கோடியில் திட்டம் – இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் ஸ்ரீ ராமுலு

December 7, 2022 தண்டோரா குழு

கோவை அவிநாசி ரோடு அண்ணா சிலை அருகே உள்ள இந்திய தொழில் வர்த்தக சபை அலுவலகத்தில் இன்று இந்திய தொழில் வர்த்தக சபையின் தலைவர் ஸ்ரீ ராமுலு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்,

டெல்லியில் சிவில் ஏவியேஷன் செக்ரட்டரி, ஜாயின் செக்ரட்டரி, ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா மெம்பர், போன்ற பலரை சந்தித்து கோவை விமான நிலைய விரிவாக்கம் குறித்து கோரிக்கையை முன்வைத்தும் எங்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட அவர்கள் 2000 கோடி ரூபாய் இதற்காக ஒதுக்க தயாராக உள்ளதாகவும், இடம் கிடைத்தால் மட்டும் போதும், 15 மில்லியன் வருடாந்திர வருமானத்திற்காக பல்வேறு திட்டங்களை தயாராக வைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும், ப்ளு பிரிண்ட் தயாராக உள்ளது, பெரிய ரக விமானங்கள் தரையிறங்க தேவையான ஓடுபாதை, அகலப்படுத்தும் பணிகளுக்கும் நாங்கள் தயாராக உள்ளதாகவும், தெரிவித்தனர் இதனைத் தொடர்ந்து இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்ததாகவும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நிலம் கையகப்படுத்தும் பணி முழுவதுமாக முடிவு பெற்றுள்ளது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பதவி ஏற்ற பின்னர் இதற்கான பணிகள் முழு வீட்டில் நடைபெற்றுள்ளது எனவும் அதற்கு முதலில் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

கோவை மாவட்டத்தில் விமான நிலைய விரிவாக்கம் விரைவில் கொண்டு வர வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கையை விடுப்பதாக, அவர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது செயளாளர் அண்ணாமலை, துணை தலைவர் துரை ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க