• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை நகரில் மிகப்பெரிய கிறிஸ்துமஸ் திருவிழா!

December 8, 2022 தண்டோரா குழு

சான்டாஸ் சோஷியலின் 5வது பதிப்பு டிச. 10 & 11 தேதிகளில் நவா இந்தியா அருகே உள்ள அலெக்சாண்டர் ஈக்வெஸ்ட்ரியன் கிளப் பில் நடைபெறுகிறது.

இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் ரஷ் ரிபப்ளிக் நிறுவனத்தின் நிறுவனர் லக்‌ஷ்மிகாந்த் கூறுகையில்,

ரஷ் ரிபப்ளிக் சார்பில் ஏற்பாடு செய்துள்ள, சான்டாஸ் சோஷியலின் ஐந்தாவது பதிப்பு 2022 டிசம்பர் 10 மற்றும்11 தேதிகளில் நடைபெருக்கிறது.சான்டாஸ் சோஷியல் என்பது கோவை நகரின் மிகப்பெரிய கிறிஸ்துமஸ் திருவிழாவாகும். வாரயிறுதி நிகழ்வில் 80க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம் பெரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஷாப்பிங்,உணவு, பொழுதுபோக்கு என அனைத்தும் ஒரே இடத்தில் காணலாம்.உணவுப் பிரியர்களுக்கு,பலவகையான உணவு வகைகள் , பிரியாணி முதல் சுஷி வரை, நீங்கள் தேர்வு செய்யலாம்.உங்கள் குழந்தைகளிடையே விருப்பமுள்ள பார்பிக்யூக்கள், ரோல்கள் மற்றும் கிறிஸ்துமஸ்-ஒய் கேக்குகள் மற்றும் குக்கீகள் என அனைத்தையும் இங்கு கிடைக்கும். மேலும் இங்கு உணவுகளை நீங்கள் வாங்கும் முன் அதனை சுவைத்து பார்த்து வாங்கிக்கொள்ளம்.

இரண்டு நாட்களும் NH47 லைவ் பேண்ட் & ஹை ஆன் ஆக்டேவ்ஸின் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.இந்த வார இறுதியில் உங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் உங்கள் நேரத்தை செலவழிக்க இது சிறந்த இடமாக இருக்கும்.கேளிக்கைகள் கலை மற்றும் கைவினைப் பட்டறைகள்,நெயில் ஆர்ட் மற்றும் முக ஓவியம் மற்றும் விளையாட்டுகள் ஏராளமாக இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற இடமாக எது இருக்கும்.

இளம் ஸ்லூத்கள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கான புதையல் வேட்டையும் உள்ளது. மேலும், முதன்முறையாக, கோயம்புத்தூர் ஃபிஃபா உலகக் கோப்பை சவாலின் பதிப்பு நடைபெறுகிறது என்றார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ரஷ் ரிபப்ளிக் நிறுவனத்தின் இணை நிறுவனர் மது ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க