December 10, 2022 தண்டோரா குழு
தேனி மாவட்டத்தை சேர்ந்த ஐந்து வயது சிறுவன் முகம்மது நதீன் ஆங்கில படம் மற்றும் நாவல்களில் வரும் மார்வல் கதாபாத்திரங்களின் 100 பெயர்களை 99 விநாடிகளில் பீனிக்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
தேனி மாவட்டத்தை சேர்ந்த வருசை பீர் மைதீன்,நபீலா பேகம் ஆகியோரது மகன் முகம்மது நதீன்.ஐந்து வயதான சிறுவன் நதீம் தனது ஒன்றரை வயதிலேயே 30 நாடுகளின் தேசிய கொடிகளின் பெயர்,மற்றும் 100 தேசிய தலைவர்களின் பெயர்களை கூறுவது என பல்வேறு உலக சாதனை படைத்தவர். இந்நிலையில் சிறுவன் நதீனின் அபார நினைவாற்றலை கண்காணித்த இவரது பெற்றோர் அளித்த தொடர் பயிற்சியால் தற்போது மீண்டும் ஒரு உலக சாதனையை நதீன் படைத்துள்ளார்.
கோவை சூலூர் பகுதியில் கிராமிய புதல்வன் அகாடமியில் நடைபெற்ற சாதனை நிகழ்வில்,ஆங்கில படம் மற்றும் நாவல்களில் வரும் மார்வல் கதாபாத்திரங்களான ஸ்பைடர் மேன்,டாக்டர் ஸ்ட்ரேன்ஜர், ஹல்க்,தார், அவேன்சர்ஸ்,கேப்டன் மார்வல்,அயர்ன் மேன், என 100 பாத்திரங்களின் பெயர்களை 99 விநாடிகளில் கூறி அசத்தினார்.
இதனை கண்காணித்த பீனிக்ஸ் உலக சாதனை புத்தகத்தின் கலை மற்றும் பண்பாட்டு துறை தீர்ப்பாளர் டிராவிட் கண்ணன் சிறுவனின் சாதனைக்கும் அங்கீகாரம் வழங்கினார்.சிறுவன் நதீனின் நினைவாற்றலை கண்டு அங்கு கூடியிருந்தோர் கைகளை தட்டி பாராட்டினர். தொடர்ந்து நதீனிற்கு பீனிக்ஸ் உலக சாதனை புத்தகத்தின் நிறுவனர் டாக்டர் கலையரசன் சான்றிதழ்,பதக்கம் மற்றும் கோப்பைகள் வழங்கி கவுரவித்தார்.