December 11, 2022 தண்டோரா குழு
இந்திய தொழில் வர்த்தக சபை மற்றும் அட்வர்டைசிங் கிளப் சார்பில்,’கோவையின் பிராண்ட் அம்பாசிடர் அவார்டு ‘என்ற விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில்’ வாக்கரூ’நிறுவன நிர்வாக இயக்குனர் நவுசாத்,கீர்த்திலால்ஸ் ஜூவல்லரி இயக்குனர் பரேஷ் கீர்த்திலால் மேத்தா, ஜி.டி. , இன்ஸ்டிடியூட் நிர்வாக இயக்குனர் ஜி.டி.கோபால் , மைக்ரோ காட்டன் நிர்வாக இயக்குனர் கண்ணப்பன் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டன.
மேலும்,இவ்விழாவில் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு தலைவர் பைபக் டெப்ராய், சிறப்பு விருந்தினராக வீடியோ கான்பிரசிங் மூலம் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர்,
இந்தியாவின் பொருளாதாரம் இந்தாண்டு, ஏழு சதவீத வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதை தான் உலக வங்கியும் தெரிவித்துள்ளது.2023 24 ல் , மற்ற நாடுகளின் வளர்ச்சி குறைந்தாலும் , இந்தியாவின் வளர்ச்சி குறைந்தது , 6.5 சதவீதமாக இருக்கும்.
சில நாடுகள் ஏற்றுமதியை நம்பி மட்டும் உள்ளதால்,அந்நாட்டின் பொருளாதாரத்தில் சிக்கல் ஏற்படும்.வரும் 2047 ல் பொருளாதார வளர்ச்சியில் உயர்ந்த இடத்தை பிடிக்க தேவையான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.எதிர்காலம் இந்தியாவுக்கு பிரகாசமாக இருக்கிறது.இதற்கு அரசு மட்டும் முயற்சித்தால் போதாது,அனைத்து தரப்பு மக்களின் ஒத்துழைப்பும் அவசியம்.
இவ்வாறு அவர் பேசினார் .
இந்த விருது வழங்கும் விழாவில்
இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை தலைவர் ஸ்ரீ ராமுலு,அட்வர்டைசிங் கிளப் தலைவர் ராஜேஷ் நாயர், பி.எஸ்.ஜி. , கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.