December 11, 2022 தண்டோரா குழு
கோவை போத்தனூரில் மாநகர காவல்துறை மற்றும் கோவை மாவட்ட சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்ட மைப்பு சார்பில் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரை யாடல் சந்திப்பு கூட்டம் நேற்று நடந்தது.இக்கூட்டத்தில் ஜமாத் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு பேசும்போது,
கல்வி தான் ஆயுதம் ஒருவருக்கு ஒருவர் உதவினால் தான் நாம் ஒரு நல்ல சமுதாயமாக இருக்கமுடியும். இளைஞர்களுக்கு கல்வி என்ற போர் ஆயுதத்தை அளிக்க வேண்டும்.
முன்பு எல்லாம் படிக்க அதிக கல்லூரி இல்லை. மிகவும் குறைவான என்ஜினீயரிங் சீட்தான் இருக்கும்.ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது.
தமிழகத்தில் 500 – க்கும் மேற் பட்ட கல்லூரிகள் உள்ளன.ஒரு லட்சம் சீட் காலியாக உள்ளது. கல்வி என்பது ஒரு மிகப்பெரிய ஆயுதம். அதை வைத்து நீங்கள் உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். அரசு பள்ளிகளில் படித்தவர்கள் பெரிய நிலையில் உள்ளனர். உங்கள் தாய் , தந்தை உங்களுக்காக படும் கஷ்டத்தை புரிந்து கொள்ள வேண்டும்
இது நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற உதவும் என்றார்.