December 12, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சிக்குட்பட்ட கடை வீதிகளான தாமஸ் வீதி, ஆர்.ஜி. விதி ஆகிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயண்பாடுகள் அதிக அளவில் உள்ளது என்று புகார் எழுந்தது.
இதனையடுத்து இப்பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர் பிரதாப்பின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் மொத்தமாக 46 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தடைகளை மீறி பிளாஸ்டிக் கவர்கள் வைத்திருந்த கடைக்காரர்களிடம் இருந்து மொத்தமாக, ரூ.15 ஆயிரத்து 300 அபராதமாக வசூல் செய்யப்பட்டது.