• Download mobile app
23 Apr 2025, WednesdayEdition - 3360
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு

December 12, 2022 தண்டோரா குழு

மூன்று முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தினர் அச்சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் ஜாகீர் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்று முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.”அனலாக் நிலுவைத் தொகை கோரும் அறிவிப்புகளை தள்ளுபடி செய்ய வேண்டும், வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட செட் அப் பாக்ஸ்களை திரும்ப கேட்பதை நிறுத்த வேண்டும், கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கான நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும்” ஆகிய மூன்று முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து பேசிய சங்கத்தினர்,

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கள் சங்கத்தினர் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு அளித்து வருவதாக தெரிவித்தார். 2017ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அனலாக் சிக்னல் காலாவதி ஆகிவிட்டதாகவும் இருப்பினும் நிலுவைத்தொகை என கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் பணம் வசூல் செய்யப்பட்டு வருவதாகவும் விலையில்லா செட்டாப் பாக்ஸ் என கூறி வழங்கிவிட்டு செயல்படாத செட்டாப் பாக்ஸுகளுக்கு முழுத் தொகையையும் ஆப்பரேட்டர்களிடமிருந்து வசூல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இதனை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று தமிழக முதல்வர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

மேலும் தங்களுக்கு காவல்துறை மற்றும் வருவாய் துறையின் மூலம் இடையூறு ஏற்படுவதாக தெரிவித்த அவர்கள் தங்களது மனுவை உடனடியாக பரிசீலனை செய்து உரிய தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

மேலும் படிக்க