January 9, 2017 தண்டோரா குழு
நைஜீரியா நாட்டின் யோபே மாநிலத்தின் ராணுவ முகாம் மீது போகோ ஹரம் தீவிரவாதிகள் நடத்திய தாகுதலில் 5 நைஜீரிய ராணுவத்தினர் இறந்தனர். ராணுவத்தினரின் பதில் தாக்குதலில் 15 போகோ ஹரம் தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.
இது குறித்து அந்நாட்டின் ராணுவ அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 8) கூறியதாவது:
போகோ ஹரம் தீவிரவாதிகள் இஸ்லாமிய சட்டதிட்டங்ககளுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை நைஜீரியா நாட்டின் யோபே மாநிலத்தின் புணி யாதி என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 நைஜீரிய ராணுவத்தினர் மற்றும் 15 போகோ ஹரம் தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.
போர்னோ மாநிலத்தின் தலைநகர் மைடிகுரி உள்ளிட்ட பிற பகுதிகளில் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். ஆனால், அப்பகுதியில் ஏற்பட்ட உயிர் சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.