• Download mobile app
23 Apr 2025, WednesdayEdition - 3360
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இரண்டு கைகளிலும் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த 11 வயது மாணவன்

December 17, 2022 தண்டோரா குழு

கோவை விளாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் மாணவன் தியொடரஸ் ஹெவன் (11). இவர் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டு வருகிறார்.இவர் தொடர்ந்து 7 மணிநேரம் 7 வினாடிகள் இடைவிடாமல் இரண்டு கைகளிலும் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளார்.

இது குறித்து தியொடரஸ் ஹெவன் கூறியதாவது:

‘ எனக்கு வீசிங் பிரச்சனை இருக்கிறது .சிறிது தூரம் கூட என்னால் ஓட முடியாது. அப்படி ஓடினாலும் கூட பயங்கரமாக மூச்சு இரைச்சல் ஏற்படும்.இதையடுத்து எனது பெற்றோர்கள் என்னை முல்லை தற்காப்பு கலை கழகத்தில் என்னை சேர்த்து விட்டனர். அங்கு எனது பயிற்சியாளர் பிரகாஷ்ராஜ் எனக்கு சிலம்பம் பயிற்சியை அளித்தார். ஆரம்ப காலத்தில் என்னால் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே சிலம்பம் சுற்ற முடிந்தது. ஆனால் என்னை மேலும் சிலம்பம் சுற்ற சொல்லி எனது பயிற்சியாளர் என்னை ஊக்கப்படுத்துவார்.

நாட்கள் செல்ல செல்ல என் பயிற்சியும் அதிகமானது. இதனால் என்னுடைய ஸ்டாமினா அதிகரித்தது. ஆறு மாதங்களில் மூச்சு இரைச்சல் கம்மியாகி மற்றவர்களை போல சிலம்பம் சுற்ற ஆரம்பித்தேன். அப்பொழுது எனது பயிற்சியாளர் இந்த சிலம்பத்தில் உன்னால் சாதிக்க முடியும் என்று கூறி எனக்கு இந்த 7 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றுவதற்கான பயிற்சியை எனக்கு அளித்தார். இதன் காரணமாக தற்போது தொடர்ந்து ஏழு மணி நேரம் 7 நிமிடங்கள் இரண்டு கைகளிலும் சிலம்பம் சுற்றி உலக சாதனை செய்துள்ளேன்.

இந்த சாதனையை இந்தியன் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ், அமெரிக்கன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஐரோப்பியன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் ஆகிய மூன்று புத்தகங்கள் அங்கீகரித்துள்ளது. எந்த ஒரு தடங்கலும் நிரந்தரம் இல்லை. நம்முடைய முயற்சியும் திறமையும் இருந்தால் எப்பேர்ப்பட்ட தடங்களையும் மீறி பல சாதனைகள் செய்ய முடியும்’ இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க