December 22, 2022 தண்டோரா குழு
கோவை பி பி ஜி செவிலியர் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உலக அளவில் பி பி ஜி மாணவர்கள் இணையதளம், மாணவர்களுக்கான உளவியல் வழிகாட்டுதல் நிகழ்ச்சி உள்ளிட்டவற்றை கல்லூரியின் நிறுவனர் டாக்டர் தங்கவேலு துவக்கி வைத்தார்.
கோவை சத்தி சாலை கீரணத்தம் பகுதியில் பி.பி.ஜி.செவிலியர் கல.லூரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கல்லூரியில் பயின்ற மாணவ,மாணவிகள் பலர் பல்வேறு நாடுகள் மற்றும் உள்நாடுகளில் உயர்ந்த பதவிகள் வகித்து பணி புரிந்து வருகின்றனர். இவ்வாறு பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வரும், முன்னால் மாணவர்கள் அனைவரும் சந்திக்கும் நிகழ்ச்சி,பி.பி.ஜி.செவிலியர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரியின் நிறுவனர் டாக்டர் எல்.பி தங்கவேலு தலைமையில் நடைபெற்ற இதில் தாளாளர் சாந்தி தங்கவேலு கல்லூரியின் இயக்குனர் டாக்டர் அஸ்வின் ஆகியோர் முன்னிலை வைத்தனர்..நிகழ்ச்சியில் 1997 ஆம் முதல் 2015 ஆம் ஆண்டு வரை கல்லூரியில் பயின்ற முன்னால் மாணவ,மாணவிகள் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் முன்னதாக முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நினைவு கூறும் போதுமாக கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. தொடர்ந்து கல்லூரியில் படித்து பல்வேறு பணிகளில் உயரிய பதவியில் இருக்கும் மாணவர்கள் பிபிஜி செவிலியர் கல்லூரி சார்பாக கௌரவிக்கப்பட்டனர்.தொடர்ந்து நிகழ்ச்சியில் உலக அளவில் பி பி ஜி மாணவர்கள் இணையதளம், முன்னாள் மாணவர்கள் சார்பாக உதவித் தொகை வழங்குதல், மேலும் ஒவ்வொரு வருடமும் சிறந்த மாணவர்களுக்கான விருது வழங்குதல், முன்னாள் மாணவர்களுக்கான உலகளாவிய மாநாடு, செய்தி மடல், உளவியல் வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஆகியவற்றை கல்லூரி நிறுவனர் டாக்டர் தங்கவேலு துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் கலைவாணி கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் முத்துலட்சுமி பேராசிரியை டாக்டர் ஜெயபாரதி உள்ளிட்ட கல்லூரி பேராசிரியர்கள் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.