December 24, 2022
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறியிருப்பதாவது:
நகராட்சி நிர்வாக மென்பொருளில் உள்ள வரிவிதிப்புதாரர்களின் விபரங்களை மேம்படுத்தும் வகையில்,கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து குடியிருப்புதாரர்களும் தங்களது சொத்துவரி விதிப்பு எண்களுடன் குடும்ப அட்டை இணைக்கவும், வணிக நிறுவனங்கள் தங்களது சொத்துவரி விதிப்பு எண்ணுடன் பான் அட்டை அல்லது ஜி.எஸ்.டி எண்கள் குறித்த விபரங்களை இணைக்கவும் மேலும், மாநகராட்சியின் வரியில்லா இனங்களின் குத்தகைதாரர்கள் குத்தகை ஒதுக்கீட்டு எண்ணுடன் பான் அட்டை அல்லது ஜி.எஸ்.டி இணைக்கவும் நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆவண நகல்களுடன் வார வேலை நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சம்மந்தப்பட்ட மண்டல அலுவலகங்களை நேரில் அணுகி இதற்கு என அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்தில் 2023ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.