December 26, 2022
தண்டோரா குழு
சிக்கிம் மாநிலத்திலுள்ள வடக்கு பகுதியில் 23 தேதி பள்ளத்தாக்கு ஒன்றில் இந்திய இராணுவ வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 16 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் சிக்கிமிலுள்ள சாட்டன் என்ற இடத்திலிருந்து தங்கு என்ற இடத்தை நோக்கி இராணுவ வாகனம் ஒன்று வீரர்களுடன் சென்றுள்ளது.
அப்போது வடக்கு பகுதியில் செமா என்ற இடத்தில் வளைவில் வாகனம் திரும்பியுள்ளது. அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த வாகனம் உடனே பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. தொடர்ந்து இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 4 இராணுவ வீரர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து தற்போது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.இந்த விபத்தில் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் வைசாக் உடல் கோவை விமான நிலையம் கொண்டுவரப்பட்டது அவரது உடலுக்கு ராணுவ மரியாதை செய்யப்பட்டது. அட்மினிஸ்ட்ரேடிவ் கமெண்ட் பிஜு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது பின்னர் அவரது உடல் அமரர் ஊர்தி மூலம் பாலக்காடு கொண்டு செல்ல பட்டது.