December 30, 2022
தண்டோரா குழு
கோவைப்புதூர் அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தின் தேர் திருவிழா வரும் ஜனவரி 8ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதன் ஒருபகுதியாக குழந்தை இயேசு திருத்தலத்தின் கொடியேற்றம் விழா நடைபெற்றது. மறைமாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ், பங்கு தந்தை வினோத் ஆண்டனி, உதவி பங்கு தந்தை ராயப்பன்தாஸ் முன்னிலையில் கொடியேற்றப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.குழந்தை இயேசு திருத்தலத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்தும்,வெளிமாநிலங்களிலும் இருந்தும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.