January 7, 2023 தண்டோரா குழு
கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள, சம்ஹிதா அகாடமியின் ஆண்டு விளையாட்டு விழா,பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
முதல்வர் ராதா.கே தேசிய கொடியை ஏற்றி விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார். பள்ளியின் மாணவர்கள் வாயு,அக்னி,பிருத்வி மற்றும் ஜில் என நான்கு அணிகளாக விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய உடற்கல்வி இயக்குனர் மற்றும் டிவைன் ஸ்போர்ட்ஸ் நிறுவனர் ஆல்வின் பிரான்சிஸ்,
மாணவர்களுக்கு விளையாட்டு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அது மன அழுத்தத்தில் இருந்து நம்மை காப்பதுடன், உடல் மற்றும் மூளை வலிமையை உருவாக்கும். வெற்றி, தோல்வி எதுவாயினும் சம மனநிலையை ஏற்படுத்தும். ஆகவே தினமும் ஒரு மணி நேரமாவது ஓடியாடி விளையாட பெற்றோர்கள் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் சம்ஹிதா அகாடமியின் செயல் இயக்குநர் ஆஷா தாமஸ் கலந்து கொண்டு அதிகம் புள்ளிகள் பெற்ற பிரித்வி அணியினருக்கு ஒட்டுமொத்த சாம்பியன் சுழற்கோப்பையை வழங்கினார். முன்னதாக மார்கிரேட்சத்யன் அனைவரையும் வரவேற்றார். முடிவில் சுஜித்ரா நன்றி கூறினார்.