January 7, 2023 தண்டோரா குழு
கோவையில் பிராமணர்களின் சமூகத்தை மேம்படுத்த தாம்ப்ராஸ் மாவட்ட மாநாடு , 7 வது பதிப்பு இன்று 7 ஆம் தேதி மற்றும் நாளை 8 ம் தேதிகளில் கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடக்கிறது.
கோவை மாவட்டத்தில், வசிக்கும் பிராமணர்களை அடையாளம் கண்டு, அவர்களின் உண்மை நிலையை மதிப்பிட்டு, அவர்களில் எத்தனை பேர் பொருளாதாரத்தில் நழுவு அடைந்து உள்ளனர். என்பது கண்டறியப்பட்டு குறிப்பாக சுய உதவி இல்லாத ஏழைகள் எத்தனை பேர் உள்ளனர். என்பதை கண்டு அறிந்து அவர்களுக்கு உதவுவதே மாநாட்டின் முக்கிய நோக்கமாக நடைபெற்று வருகிறது.
இன்றைய மாநாட்டில் மத்திய அரசு நலத்திட்டங்கள் முகாமினை பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் மற்றும் கோவை மாநகர் மாவட்ட பார்வையாளர் பேராசிரியர் கனகசபாபதி துவக்கி வைத்தார் உடன் கோவை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் திரு அபினவ் ரங்கசாமி , உடையாம்பாளையம் மண்டல் தலைவர் சசிகுமார், மற்றும் மாவட்ட மண்டல் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அங்கு பங்கு பெற்ற மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பிராமணர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.