• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கருத்து சுதந்திரத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்கிறோம்-மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

January 8, 2023 தண்டோரா குழு

கோவை திருமலையாம்பாளையம் பகுதியில் உள்ள நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட சிறிய அளவிலான திரையரங்கம் திறப்பு விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் நடிகர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி தரப்பில் தரப்பட்ட அனைவருக்கும் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன்,

RRR,பாகுபலி போன்ற படங்கள் இந்திய அளவில் கொண்டாடப்படுகிறது. சூட்டிங்க்கான அனுமதி கிடைப்பதில் எளிமையான வழிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.30 சதவீதம் சலுகையுடன் வெளிநாட்டவர்கள் படம் எடுக்க இந்தியாவில் அனுமதிக்கபடுகிறது. கருத்து சுதந்திரத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்கிறோம். காங்கிரஸ் மாதிரி இல்லை. தமிழ்நாடு, தமிழகம் சர்ச்சை தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, சங்க இலக்கியங்களில் கூட தமிழகம் என குறிப்பிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அரசியல் சார்ந்த படங்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அப்படி எந்த அழுத்தமும் இல்லை என பதில் அளித்தார். ஷாருக்கான் பட ரிலீஸில் நடந்த விவகாரம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, அது சட்டம் ஒழுங்கு விவகாரம்.அதை காவல்துறை பார்த்துக் கொள்வார்கள் என பதில் அளித்தார்.

மேலும் படிக்க