January 8, 2023 தண்டோரா குழு
கோவை டவுன்ஹால் அடுத்த மணிகூண்டு பகுதியில், ஜிஎஸ்டி சம்பந்தமான அனைத்து சந்தேகங்களையும் மாணவ மாணவிகள் தெரிந்து கொள்ளும் வகையில், வாங்க பழகலாம் எனும் கருத்தரங்கு நடைபெற்றது.
கோவை டவுன்ஹால் அடுத்த மணிகூண்டு பகுதியில், ஜிஎஸ்டி சம்பந்தமான அனைத்து சந்தேகங்களையும் மாணவ மாணவிகள் தெரிந்து கொள்ளும் வகையில், வாங்க பழகலாம் எனும் கருத்தரங்கு நடைபெற்றது.இந்த கருத்தரங்கில், பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த ஜிஎஸ்டி வரியின் காரணமாக என்னேன்ன இடையூறுகள் உள்ளது. என்னேன்ன நன்மைகள் உள்ளது என மாணவ மாணவிகள் மத்தியில் எடுத்துரைத்தார்.
கோவை மாநகரை சுற்றியுள்ள 5 கல்லூரிகளில் இருந்து சுமார் 350 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர் காலை 10 மணியளவில் துவங்க பட்ட இந்த கருத்தரங்கம், மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்த கருத்தரங்கு வாயிலாக கோவையில் சிறந்த கல்வி சேவையாற்றிய பேராசிரியர், ஆசிரியர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கபட்டு பெருமைபடுத்த பட்டது.
இந்த நிகழ்ச்சியில், டிஎன்ஜிஎஸ்டிபிஏ அமைப்பின் தலைவர், முஹமது அஸ்கர், துணை தலைவர்கள் ராதா கிருஷ்ணன், நல்லசிவன், மாநில ஒருங்கிணைப்பாளர் சரவணன், மாநில பொதுசெயலாளர் பஷூர் அலி, மாநில இணை செயலாளர் ஜாஜகான், மணியன் குமார் என பலரும் கலந்து கொண்டனர்.