• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

என்ஐஆர்சிஏ – ஜிஓஐ இணைந்து துவக்கி உள்ள சிறுதானிய வர்த்தக சபை தலைவராக டாக்டர் சேவாக் விஜய் பதவி ஏற்பு

January 9, 2023 தண்டோரா குழு

தேசிய வணிகம் சார்ந்த விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் கோவை அவினாசி சாலையில் உள்ள ரெசிடென்சி ஹோட்டலில் சிறுதானியங்கள் உற்பத்தி மற்றும் வளர்ச்சிக்கான செயல்திட்ட ஆய்வு பணிகள் நடைபெற்றது.

இதில் என்ஐஆர்சிஏ – ஜிஓஐ இணைந்து துவக்கி உள்ள சிறுதானிய வர்த்தக சபை தலைவராக டாக்டர் சேவாக் விஜய் பதவி ஏற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய என்ஐஆர்சிஏ துறைத் தலைவர் டாக்டர் மணிவேல் கூறுகையில் மத்திய அரசு டாக்டர் சேவாக் விஜய் தலைமையில் இயற்கை மருத்துவம் மற்றும் தயாரிப்பு தொழில்முனைவு மற்றும் வேளாண் கூட்டுறவு போன்ற கள நடவடிக்கை திட்டங்களுக்கான உயர்மட்டக் குழுவை உருவாக்கியுள்ளது.

சிறந்த கொள்கை வகுப்பாளரும் சிறந்த திறமைசாலியுமான அவரது தலைமையின் கீழ், இந்தத்துறை சிறப்பான வளர்ச்சி கண்டு வருகிறது. தற்போது புதிதாக துவங்கப்பட்ட இந்த சபை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைத் தேடித் தரக்கூடிய வேளாண் கூட்டுறவு மாதிரிகளில் அதிக கவனம் செலுத்தும்.
இந்த முன்முயற்சியானது இளைஞர்களுக்கு நிதி ஆதாரங்களை ஏற்படுத்தி தருவதோடு, அவர்கள் விவசாயம் சார்ந்த தொழில் நிறுவனங்களை அமைப்பதற்கான திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் அவர்களுக்கு உதவும். கூட்டுறவின் மதிப்பு மற்றும் அதன் கொள்கைகளால் தாங்கள் கவர்ந்திழுக்கப்பட்டு தாங்கள் சொந்த நிறுவனங்களை துவக்குவதாக இன்றைய இளைஞர்கள் கூறி வருகிறார்கள்.

ஒரு விவசாய கூட்டுறவு மாதிரியானது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதோடு எளிதான முறையில் அவர்கள் சுயதொழில் துவங்குவதற்கும் துணை நிற்கிறது.மேலும் அது கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்கும் மற்றும் அனைத்து படித்த இளைஞர்களுக்கும், திறமைசாலிகளுக்கும். வேலைகளை தேடிக் கொண்டிருக்கும் சமீபத்திய பட்டதாரி இளைஞர்களுக்கும் உறுதுணையாக இருக்கும். விவசாயத் துறை வளர்ச்சிக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும் விதமாக என்ஐஆர்சிஏ தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கருத்தில் கொண்டுதான் தற்போது தமிழ்நாட்டில் சிறுதானிய வர்த்தக சபை துவக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்

மேலும் அவர் கூறுகையில்,

இந்தியாவின் பரிந்துரையை ஏற்று ஐ.நா. சபை 2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்துள்ளது.இந்த நிலையில் 72 நாடுகளின் ஆதரவுடன் இந்தியாவை சிறுதானியங்களுக்கான முனைப்புடன் உலகளாவிய மையமாக மாற்ற வேண்டும் என்ற அற்புதமான பல்வேறு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் சிறுதானியங்களைக் கொண்டு பாரம்பரிய மற்றும் நவீன முறையில் தயாரிக்கப்படும் உணவுகளை உட்கொள்ளும்போது அதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

மத்திய அரசு கடந்த ஆண்டு சிறுதானிய புதிய கண்டுபிடிப்பு சவாலை துவக்கியது. இது, சிறு தானியங்கள் உற்பத்தியில் உள்ள பிரச்சினைகளுக்கு தொழில்நுட்ப மற்றும் வணிக ரீதியான தீர்வுகளை கண்டறிய இளைஞர்களை வெகுவாக ஊக்குவிக்கும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க