January 19, 2023 தண்டோரா குழு
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த
வளர்ச்சித் திட்டத்தின் சிறப்பு முகாம் வரும் 19 மற்றும் அடுத்த மாதம் 9ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளதாவது:
கோவை மாவட்டத்தில் 56 கிராம பஞ்சாயத்துக்களில் வரும் 19ம் தேதி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.ஆனைமலை வட்டாரத்தில் திவான்சாபுதூர்,தென்சித்தூர், சோமந்துறை, பில்சின்னம்பாளையம், ரமணா முதலிபுதூர் கிராமங்களிலும், அன்னூர் வட்டாரத்தில் ஓட்டர்பாளையம், பச்சாபாளையம், பிள்ளியப்பப்பாளையம், அல்லப்பாளையம் கிராமங்களிலும்,காரமடை வட்டாரத்தில் ஜடயம்பாளையம்,ஓடந்துறை கிராமங்களிலும், கிணத்துக்கடவு வட்டாரத்தில் கப்பாளங்கரை, கக்கடவு, தேவராயபுரம், பொட்டையாண்டிபுரம்பு, கோவிந்தாபுரம், மன்றாம்பாளையம், குதிரையாலாம்பாளையம், முள்ளுபாடி கிராமங்களிலும் மதுக்கரை வட்டாரங்களிலும் மலுமிச்சம்பட்டி,வழுக்குபாறை, பாலத்துறை கிராமங்களிலும்,பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் குருடம்பாளையம், சின்னதடாகம் கிராமங்களிலும் பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில் தேவம்பாடி,குள்ளக்காபாளையம், நல்லூத்துகுளி, புளியம்பட்டி, ஆவலப்பம்பட்டி, ராசக்காபாளையம், கிட்டாசூராம்பாளையம், பூசாரிபட்டி, ஒக்கிலிபாளையம், காபிலிபாளையம் கிராமங்களிலும் பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில் தென்குமாரபாளையம், ஜிஞ்சுவாடி, கோமங்கலம்புதூர், நல்லாம்பள்ளி, எஸ்.மலையாண்டிபட்டிணம், வக்கம்பாளையம், சீலக்காம்பட்டி கிராமங்களிலும் சர்க்கார்சாமக்குளம் வட்டாரத்தில் வெள்ளமடை, அக்கரசாமக்குளம்,அத்திபாளையம் கிராமங்களிலும் சுல்தான்பேட்டை வட்டாரத்தில் ஜே.கிருஷ்ணாபுரம், போகம்பட்டி, வடவேடம்பட்டி, ஜல்லிபட்டி, பாப்பம்பட்டி, இடையர்பாளையம் கிராமங்களிலும்
சூலூர் வட்டாரத்தில் பட்டணம், பீடம்பள்ளி, மயிலம்பட்டி கிராமங்களிலும் தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் மத்வராயபுரம், ஜாகீர்நாயக்கன்பாளையம், வெள்ளமலைபட்டிணம் கிராமங்களிலும் நடைபெறுகிறது.
இம்முகாமில் வேளாண்மை- உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை,விதைச்சான்று மற்றும் அங்கக சான்றளிப்புத் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரகவளர்ச்சித் துறை, கூட்டுறவுத் துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கால்நடைபராமரிப்புத் துறை மற்றும் பால்வளத் துறை மற்றும் துறைகள் பங்கேற்க உள்ளன.
இம்முகாமில் பட்டாமாறுதல், சிறு,குறு விவசாயிகளுக்கு சான்று வழங்குதல், பயிர் கடன் விண்ணப்பம் பெறுதல், கால்நடைமுகாம், கிசான் கடன் அட்டை விண்ணப்பம் பெறுதல், ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்க விண்ணப்பம் பெறுதல் ஆகியன மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.