• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் தொடர பயணிகள் கோரிக்கை

January 24, 2023 தண்டோரா குழு

மேட்டுப்பாளையம்- திருநெல்வேலி இடையே சிறப்பு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடர பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு திருநெல்வேலி புறப்படும் சிறப்பு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் கோவை, போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, திண்டுக்கல்,மதுரை, சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி,அம்பாசமுத்திரம் வழியாக திருநெல்வேலியை சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து வாரந்தோறும் வியாழக்கிழமை இரவு புறப்பட்டு அம்பாசமுத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில்,ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், மதுரை, திண்டுக்கல் ,பழனி, உடுமலை ,பொள்ளாச்சி, கோவை வழியாக வெள்ளிக்கிழமை காலை மேட்டுப்பாளையம் சென்றடைகிறது.கடந்த ஏப்ரல் மாதம் துவங்கப்பட்ட இந்த சிறப்பு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைந்தது.

தொடர்ந்து இந்த ரயில் சேவையை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் ரயில்வே பயணிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்ததன் பேரில் இந்த ரயில் சேவையை ஜனவரி 27ம் தேதி வரை நீட்டிப்பதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.

தென்மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் உயர்கல்வி கற்பதற்காக கோவை வந்து தங்கி கல்வி பயில்கின்றனர்.இவர்கள் வார விடுமுறை, தேர்வு விடுமுறை மற்றும் அரசு விடுமுறைகளில் சொந்த ஊருக்கு செல்வதற்கு அரசு பேருந்து, மற்றும் ஆம்னி பேருந்துகளை நம்பி இருக்க வேண்டியுள்ளது.

கோவை-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் எப்போதும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிவதால் மேட்டுப்பாளையம்- திருநெல்வேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் பொதுமக்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் வியாபாரிகளுக்கும் மிகுந்த பயன் அளிப்பதாக இருந்து வந்தது. இந்த சிறப்பு வாராந்திர ரயில் சேவை மூலம் தெற்கு ரயில்வேக்கு ரூ.1 கோடிக்கும் அதிகமாக வருவாய் கிடைத்துள்ளது.

வருகிற 27ம் தேதி பழனி பால தண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
17 ஆண்டுகள் கழித்து கும்பாபிஷேகம் நடைபெறுவதால் பழனிக்கு பக்தர்கள் படையெடுக்க உள்ளனர். கும்பாபிஷேகத்தை காண 2000 பேருக்கு மட்டுமே கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மண்டல பூஜைகளில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து பழனிக்கு பக்தர்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பார்கள். மேலும் பிப்ரவரி மாதம் 5ம் தேதி தைப்பூசம் வர இருப்பதால் பழனிக்கு பக்தர்களின் வருகை கூடுதலாக இருக்கும்.

இந்நிலையில் மேட்டுப்பாளையம் திருநெல்வேலி இடையேயான வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவை வரும் 27ம் தேதி உடன் நிறைவு பெறுகிறது. இந்த ரயில் சேவையை தொடர்ந்து நீட்டிக்க வேண்டும் என வியாபாரிகள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க