January 27, 2023 தண்டோரா குழு
சங்கர் ஐஏஎஸ் அகாடமி மற்றும் யங் இண்டியன்ஸ் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான ‘ஒரு நாள் – மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர், மாநகராட்சி ஆணையர்’ என்ற தனித்துவமான போட்டியை சமீபத்தில் கோவை விழாவின் 15வது பதிப்பின் போது தொடங்கியது.
இந்தப் போட்டியில் பதிவு செய்து பங்கேற்கும் மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை, மின் ஆளுமை, போதைப்பொருள் பயன்பாடு, பெண்கள் பாதுகாப்பு, விபத்தில்லா சாலைகள், சைபர் பாதுகாப்பு மற்றும் தண்ணீர் தொடர்பான மாவட்ட நிர்வாகம், காவல் துறை மற்றும் மாநகராட்சியால் கண்டறியப்பட்ட சிக்கல் அறிக்கைகள் வழங்கப்பட்டது. மேலாண்மை மற்றும் மாணவர்கள் வழங்கப்பட்டுள்ள சிக்கல் அறிக்கைகளுக்கு அவர்களின் புதுமையான தீர்வுகளை வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
இதில் வெற்றியாளர்கள் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் மற்றும் மாநகராட்சி ஆணையருடன் ஒரு நாள் செலவிடுவார்கள், மேலும் வெற்றி பெறுபவர்கள் அனைவருக்கும் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் 100% உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்தப் போட்டியின் இறுதிச்சுற்று கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் உள்ள சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன்,கோவை மாநகர காவல்துறை ஆனையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.