• Download mobile app
23 Apr 2025, WednesdayEdition - 3360
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பரம்பிகுளம் ஆழியார் பிரதான கால்வாய் விவசாய கிணறுகளின் மின்இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையை ரத்து வேண்டும்

January 31, 2023 தண்டோரா குழு

இதுகுறித்து விவசாய சங்க தலைவர் சு.பழனிசாமி கூறியதாவது

கடந்த 60 ஆண்டுகளாக பி. ஏ. பி. நீரை நம்பி பிரதான கால்வாயின் இருபுறமும் உள்ள விவசாயிகள் ஆயக்கட்டுக்கு உட்படாத விவசாய நிலங்களுக்கு கிணற்றுநீர் மூலமாக விவசாயம் செய்துவருகிறார்கள்.இன்று பொதுப்பணி துறையினரும்,மாவட்ட நிர்வாகமும் இடையூறு செய்துவருகிறார்கள்.இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.மேலும் தென்னைமரம் கருகும் அபாயம் உள்ளது.

எனவே கால்வாயின் கரையோர விவசாயிகளின்கிணறுகளில் மின் இணைப்பு துண்டிப்பு மற்றும் அகற்றும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும்.கடந்த 21. 9 .22 ஆம் தேதிபரம்பிக்குளம் மதகு பராமரிப்பு இல்லாத காரணத்தால் உடைந்து தண்ணீர் வீணாக கடலில் சென்றுள்ளது எனவே அனைத்து மதகுகளையும் உடனே சரி செய்ய வேண்டும். மேலும் கிடப்பில் உள்ள ஆனைமலை நல்லாறு திட்ட பணிகளை உடனே துவங்க வேண்டும்.விவசாயிகளின் கிணற்றில் உள்ள மின் இணைப்பை துண்டிக்க கூடாது தண்ணீரை தவறாக பயன்படுத்தும் நபர்களைகண்டறிந்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழக அரசு உடனடியாக அரசு அதிகாரிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கொண்ட ஒரு குழு அமைத்து1965 ஆம் ஆண்டின்அரசு ஆணையை சரி செய்ய வேண்டும் இல்லை என்றால் 5 லட்சம் விவசாயிகள் பாதிப்பு அடைவார்கள். அந்த விவசாய நிலங்கள் பாலைவனம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது விவசாயிகள் பிரதிநிதிகள் ஆனந்தகுமார் ராமசாமி, கார்த்திக், கிருஷ்ணசாமி ஆகியோர் உடன் இருந்தார்.

மேலும் படிக்க