January 11, 2017 தண்டோரா குழு
“பிராணிகள் வதை சட்டத்திற்கு முரணாக தமிழக அரசால் எந்த சட்டமும் இயற்ற இயலாது” என்று தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.அதே சமயம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு உறுதியாக நடக்கும் என்றும் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு உறுதியாக நடக்கும். அதை நிச்சயம் உறுதி செய்வோம்.அதே நேரம், பிராணிகள் வதைத் தடுப்புப் சட்டத்திற்கு எதிராக எந்த சட்டமும் இயற்ற இயலாது. கடந்த 2009-ம் ஆண்டு திமுக கொண்டு வந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. தமிழக அரசால் தனியாகச் சட்டம் இயற்ற முடியாது.
அதுமட்டுமின்றி, பிராணிகள் வதை சட்டத்திற்கு முரணாக தமிழக அரசால் எந்த சட்டமும் இயற்ற இயலாது. இதற்கு முன் 2009 ல் திமுக அரசு கொண்டு வந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
தமிழகர்களின் கலாசாரம், பண்பாடு கட்டிக் காக்கப்படும். ஜல்லிக்கட்டு நடத்தும் முடிவில் தமிழக அரசு எள்ளளவும் பின்வாங்காது.
இவ்வாறு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.