February 8, 2023 தண்டோரா குழு
டாடா குழுமத்தைச் சேர்ந்த டைட்டன் நிறுவனத்தின் மேலும் ஒரு புதிய விற்பனை பிரிவான ‘தநைரா’ மற்றும் கோவையைச் சேர்ந்த மகிஸ் சில்க்ஸ் அண்டு ஏஜென்ஸிஸ் உடன் சேர்ந்து சேலை உற்பத்தி செய்வதில் ஒரு முதல் முயற்சியாக ‘வீவர்ஷாலா (நெசவுச்சாலை)-வை கோவையில் தொடங்க உள்ளது.
டாடா தயாரிப்பான தநைரா (Taneira) உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி நகரில் இரண்டு, சட்டீஸ்கரின் சம்பாவில் ஒன்று என மூன்று நெசவுச்சாலைகளை (Weavershala-வீவர்ஷாலா) வெற்றிகரமாகத் தொடங்கியதை அடுத்து நான்காவது கிளையினைக் கோயம்புத்தூரில் ஆரம்பித்துள்ளது.இம்முயற்சியானது தென்பிராந்திய பட்டு நெய்யும் நுட்பங்களை நவீனப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதேநேரத்தில் எதிர்காலத் தலைமுறையினருக்குக் கையால் நெய்யும் பாரம்பரிய முறைகளைப் பாதுகாத்து வழங்குவதோடு, தென்பிராந்திய பட்டுச் சேலைகள் தயாரிப்பில் சிறந்து விளங்குவதற்காக நெசவாளர்களுடன் இணைந்து செயல்படுகிறது.
உட்கட்டமைப்பை மேம்படுத்தி சுகாதாரத்தை சிறப்பாக பராமரிப்பதன் மூலமாக, செயல்பாடுகளுக்கு உகந்த சூழலுடன், சௌகரியமான சுற்றுச்சுழலில் நெசவாளர்கள் பணியாற்ற உதவுவதை இம்முயற்சி முக்கியமாக வலியுறுத்துகிறது. அவர்களது வளர்ச்சியையும் மேம்பாட்டையும் உறுதிப்படுத்த கைகட்டி, சிறுமுகை – அன்னூர் சாலை, கோயம்புத்தூர், தமிழ்நாடு முகவரியில் அமைந்த தனது கூட்டு நிறுவனமான மகிஸ் சில்க்ஸ் அண்டு ஏஜென்ஸிஸ் உடன் இணைந்து செயலாற்றுகிறது.
டைட்டன் கம்பெனி லிமிடெட்டின் நிர்வாக இயக்குனரான சி.கே.வெங்கடராமன், தநைராவின் தலைமை நிர்வாக அலுவலர் அம்புஜ் நாராயண், மகிஸ் சில்க்ஸ் அண்டு ஏஜென்ஸின் உரிமையாளர் ஆர். மல்லிகார்ஜுனன் ஆகியோர் சிறப்புமிக்க இந்நிகழ்வைத் தொடங்கி வைத்தனர்.
புதிதாகத் தொடங்கப்பட்ட வீவர்ஷாலா அமைப்பில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வரும் பாரம்பரிய நெசவாளர் சமூகத்தினர் அமர்வதற்காகவே சௌகரியமான இருக்கைகளுடன் கூடிய நவீன நெசவுத்தறிகளை அறிமுகப்படுத்தியுள்ளது தநைரா.
இந்த முயற்சியின் ஒருபகுதியாக அவர்களது உற்பத்தித்திறனை அதிகரிக்கும் வகையில் நவீன பணியிடங்கள், போதுமான வெளிச்சம் மற்றும் காற்று வசதி என்று நெசவாளர்களுக்கான பணிச்சூழலை மேம்படுத்துவதற்கான வசதிகளை இந்த பிராண்ட் வழங்குகிறது. சேலைகளின் உண்மையான, பாரம்பரியக் அம்சங்களைப் பராமரிக்கும்போது, இந்த சிறப்பு வசதிகள் நெசவுச் செயல்முறைகளின் திறனை அதிகரிக்கும்.
இதுகுறித்து டைட்டன் கம்பெனி லிமிடெட்டின் நிர்வாக இயக்குனர் சி.கே.வெங்கடராமன் பேசுகையில்,
“தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் எங்களது வீவர்ஷாலாவின் நான்காவது கிளையைத் தொடங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்த முயற்சியின் மூலமாக, நுட்பமிக்க தென்பிராந்திய பட்டு நெசவுக் கலையைப் பாதுகாத்து வளர்ப்பதுடன் தென் பிராந்திய பட்டு நெசவாளர் சமூகத்தை வலுப்படுத்துவதே எங்களது நோக்கம். குறிப்பிட்ட நெசவுச் சமூகங்கள் மத்தியில் நமது கைத்தறி கைவினைப்பொருட்களின் மேம்பாட்டை இலக்காகக் கொண்ட மேம்பட்ட மற்றும் கட்டமைக்கப்பட்ட அணுகுமுறையைச் செயல்படுத்துகிறது தநைராவின் வீவர்ஷாலர் குறிப்பாக நாடு முழுவதுமுள்ள நெசவாளர்களின் பணிச்சூழலை உயர்த்துவதில் பங்களிப்பைத் தருகிறது” என்று தெரிவித்தார்.
இது பற்றி தநைராவின் தலைமை நிர்வாக அலுவலர் அம்புஜ் நாராயணன் பேசுகையில்,
“கோயம்புத்தூரில் தொடங்கப்பட்டுள்ள வீவர்ஷாலா மூலமாக, தென்பிராந்திய பட்டுச் சேலைகளின் செம்மையான பாரம்பரியத்தை வளர்ப்பதும் முன்னேற்றுவதுமே எங்களது நோக்கம். இம்முயற்சியானது சிறப்பான எதிர்காலத்தை நோக்கி நெசவாளர்களின் வாழ்க்கையை நகரச் செய்யும்; அதோடு, அனைவராலும் விரும்பப்படும் கையால் நெய்யப்பட்ட தென்பிராந்திய பட்டுச் சேலைகளுக்குப் புத்துயிர் தரும்” என்று தெரிவித்தார்.
மகிஸ் சில்க்ஸ் அண்டு ஏஜென்ஸின் உரிமையாளர் ஆர். மல்லிகார்ஜுன் பேசுகையில்,
“பாரம்பரியமான கைத்தறி தென் பிராந்திய பட்டுச் சேலை வியாபாரத்தினை எனது தாத்தா தொடங்கினார்; நமது பாரம்பரிய நெசவின் செழுமையான மரபைப் பலருக்கும் அறிமுகப்படுத்துவதற்காக, 1978-ம் ஆண்டு முதல் இதன் தடத்தை விரிவுபடுத்தும் நோக்கோடு பணியாற்றி வருகிறேன். ’வீவர்ஷாலா’ எனும் நெசவுச்சாலை மூலமாக தென் பிராந்திய பட்டுச் சேலைகள் தயாரிப்பில் சில சிறப்பான பணிகளை மேற்கொள்வதையும் உற்பத்தியை பல மடங்கு அதிகரிப்பதையும் எதிர்நோக்கியிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
புகழ்மிக்க ஜவுளித்துறை அறிஞர்கள், கைத்தறி மற்றும் கைவினை நிபுணர்கள், தொழில் துறை வல்லுநர்கள், கைவினை ஆர்வலர்கள், சேலை விரும்பிகள் எனப் பலரும் வருகை தந்து இந்நிகழ்வைச் சிறப்பித்தனர்.