• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை – சென்னை ரயில் சாமல்பட்டி நிலையத்தில் நின்று செல்லும்

February 8, 2023 தண்டோரா குழு

கோவை – சென்னை ரயில், சாமல்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

கோவை – சென்னை இடையே இயக்கப்பட்டு வரும் தினசரி விரைவு ரயில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்கிறது. வரும் நாள்களில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்கு உள்பட்ட சாமல்பட்டி நிலையத்திலும் இந்த ரயில் நின்று செல்லும். சென்னையில் இருந்து தினமும் பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மாலை 5.50 மணிக்கு சாமல்பட்டியைச் சென்றடையும்.

இரவு 10.15 மணிக்கு கோவை நிலையத்தை சென்றடையும். கோவையில் காலை 6.15 மணிக்கு புறப்படும் ரயில் காலை 9.55 மணிக்கு சாமல்பட்டியைச் சென்றடையும். பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க