February 11, 2023 தண்டோரா குழு
இந்தியன் பப்ளிக் பள்ளி சார்பில் தேசிய ரோபோடிக் போட்டி 2023 இன்று கோவை கோவில்பாளையம் பள்ளி வளாகத்தில் தொடங்கியது
கோயம்புத்தூர் இந்தியன் பப்ளிக் பள்ளி கலையரங்கில் தேசிய அளவிலான ஒரு நாள் போட்டியை கோவை காவல்துறை துணை ஆணையர் சந்தீஸ் துவக்கி வைத்து பேசினார்.
அப்போது பேசிய அவர்,
பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சென்று இருந்தாலும் பள்ளி மாணவர்களுக்காக நடைபெறும் இது போன்ற போட்டிகளில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது.சர்வதேச கல்வியில் ரோபோட்டிக் படிப்பு ஆரம்ப கல்வி மாணவர்களுக்கு மிகவும் அவசியமானதாக இருக்கிறது. சர்வதேச அளவில் சாதிப்பதற்கு இது தூண்டுகோலாக அமையும் பல்வேறு துறைகளில் ரோபோடிக் பங்களிப்பு அவசியமாக இருக்கிறது. அதை கருத்தில் கொண்டு இந்தியன் பப்ளிக் பள்ளி பிரத்தியோகமாக இந்த சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துவது தற்போது உள்ள குழந்தைகளுக்கு சர்வதேச அளவில் சாதிக்க மிக மிக உதவியாக இருக்கும் என்று கூறினார்.
ரோபாடிகா 2023 சாம்பியன்ஷிப் போட்டி குறித்து இந்தியன் பப்ளிக் பள்ளியின் தலைவர் அசோக்குமார்
கூறுகையில்,
இந்தியன் பப்ளிக் பள்ளி சார்பில் கடந்த 2019 2020 கல்வியாண்டில் முதல் போட்டியை நடத்தினோம் தற்போது இரண்டாவது முறையாக ரோபோட்டிகா 2023போட்டி நடைபெறுகிறது. சர்வதேச கல்வியில் ரோபோட்டிக்கா பாடப்பிரிவு மிகவும் மாணவர்களுக்கு அவசியம் என்பதால் பிரத்யோகமாக இந்த போட்டியை ஏற்பாடு செய்கிறோம். என்று கூறியுள்ளார்.
மேலும், போட்டியில் 75 அணிகள் 10 சர்வதேச பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 300 பேர் பதிவு செய்து இதில் கலந்து கொண்டுள்ளனர் மூன்று பிரிவுகளில் ஒன்பது போட்டிகள் நடைபெறுகிறது.இறுதியில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழும் பரிசு கோப்பையும் வழங்கி கௌரவிக்கிறோம். தொடர்ந்து அவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்த இந்தியன் பள்ளி போதிய வசதிகளை மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் என்று அசோக்குமார் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் இந்தியன் பள்ளி சிஇஓ தாமோதரன். சிஇஓ ராஜ்குமார் முதல்வர் ருச்சிக்கா .ரோபாடிகா போட்டி தலைமை ஒருங்கிணைப்பாளர் அனுராதா இயக்குனர்கள் சோனாலி சித்தாசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் உள்ள கோவை திருப்பூர்.ஈரோடு. சேலம் நாமக்கல் நீலகிரி மற்றும் கர்நாடகா கேரளா மாநிலம் கொச்சி.ஆந்திரா மகாராஷ்டிரா உள்ளிட்டா இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
போட்டியின் நடுவர்களாக எல் அண்ட் டி நிறுவனத்தின் சீனியர் பொறியாளர் மனோகர் ஜான்சன் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் டாக்டர் கௌதம் ஹைடெக் இந்தியா நிறுவனத்தின் தலைமை பொறியாளர் பிரகாஷ் ராஜகோபால் ஆகியோர் பங்கேற்று மாணவர்களின் ரோபோடிக் வடிவமைப்பு திறனை பார்வையிட்டு மதிப்பிட்டனர்.