January 11, 2017 தண்டோரா குழு
நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைக்க தைரியமான சீர்திருத்த முடிவுகள் அவசியம் என மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்று வரும் “துடிப்பான குஜராத்” (வைப்ரண்ட் குஜராத்) மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி புதன்கிழமை பேசியதாவது:
“அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. மறைமுகப் பொருளாதாரம் வளர்வதை அனுமதிக்க முடியாது.
சரக்கு வரி சேவை வரி (ஜிஎஸ்டி) மற்றும் பண மதிப்பு நீக்கம் ஆகியவை வளர்ச்சிக்குத் தேவையானதே. இதற்கான பலன் இந்த ஆண்டே கிடைக்கும். நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைக்க தைரியமான சீர்திருத்த முடிவுகள் அவசியம்.
பணமதிப்பு நீக்கத்தால் மொத்த உள்நாட்டு உற்பத்தி நேர்மையானதாகவும், அதிகமாகவும் இருக்கிறது.”
இவ்வாறு அவர் பேசினார்.