February 13, 2023
தண்டோரா குழு
கோவை ஈஷா யோகா மையத்திற்கு வருகிற 18-ந் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மகா சிவராத்திரி விழா நடக்க இருக்கிறது.இதில் சிறப்பு விருந்தினராக, ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார்.
ஜனாதிபதி கோவை வருகையை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பான ஆய்வு கூட்டம் காணொலி மூலம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.இதில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி கமிஷனர் பிரதாப், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இவர்களுடன், துறை ரீதியாக செய்ய வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பாக, தலைமை செயலர் இறையன்பு ஆலோனை நடத்தினார்.