• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கொரியர் கொடுப்பது போன்று வந்து பெண்ணை கத்தியால் குத்திய சம்பவம்

February 15, 2023 தண்டோரா குழு

கோவையில் கொரியர் கொடுப்பது போன்று வந்து பெண்ணை கத்தியால் குத்திய சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை கோவைபுதூர் தில்லை நகரில் வசித்து வருபவர் மோதிலால்.மென்பொறியாளராக பணியாற்றி வரும் இவரது மனைவி சங்கீதா (40) ஆடை வடிவமைப்பாளராக உள்ளார். இந்நிலையில்,வீட்டிற்கு வெளியே சென்று சற்று நகர்ந்து போய் கொரியர் வாங்க சென்றுள்ளார். கொரியர் பெற்ற அடுத்த வினாடியே, கொரியர் கொடுத்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சங்கீதாவின் தோள்பட்டையில் குத்தி தப்பியோடினார்.

ரத்த வெள்ளத்துடன் வீட்டருகே வந்த சங்கீதா மயக்கமடைந்ததை கண்ட அக்கப்பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சிலம்பரசன்,சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டார்.முதலில், நகை பறிப்பில் ஈடுபட்டு கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியதாக தகவல் பரவிய நிலையில், பின் சங்கீதாவை தாக்கவே திட்டமிட்டு இந்த சம்பவத்தை நடத்தியதாக காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருசக்கர வாகனத்தில் முகக்கவசம் அணிந்து, கையில் கிளவுஸ் அணிந்து வந்ததாகவும், அந்த அடையாளம் தெரியாத நபர் அந்த பகுதியில் உள்ள வாட்ச்மேன் ஒருவரிடம் போன் வாங்கி, சங்கீதாவை அழைத்து, தெருவில் நாய்கள் உள்ளதாகவும் வீடு அமைந்துள்ள தெருவின் கார்னருக்கு வரும்படி கூறி, கொரியர் வாங்கியவுடன் கத்தியால் குத்தியது தெரியவந்துள்ளது.

எதற்காக சங்கீதா தாக்கப்பட்டார், தான் எந்தவிதத்திலும் காவல்துறையால் பிடிபட்டு விடக்கூடாது என்பதற்காக வேறொருவரின் செல்போன் மூலம் சங்கீதாவை அழைத்தது ஆகியவை மூலம் ஏற்கனவே திட்டமிடப்பட்ட தாக்குதலா என்ற கோணத்தில்
குனியமுத்தூர் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதலில் காயமடைந்த சங்கீதா சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க