• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிறுவாணி அணை நீர்மட்டம் 19 அடியாக சரிவு -குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

February 16, 2023 தண்டோரா குழு

கோவை மாநகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய அணையாக சிறுவாணி அணை உள்ளது. இந்த அணை கேரளா மாநிலம் பாலக்காட்டில் அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் மாநகராட்சியில் உள்ள 30 வார்டு மக்களுக்கு வழங்கப்படுவதுடன், வழியோரங்களில் உள்ள ஏராளமான கிராமங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

சிறுவாணி அணை 49.53 அடி உயரும் கொண்டது. ஆனால் கேரளா அரசு 45 அடிக்கு மேல் நீர் தேக்கி வைக்க அனுமதிப்பது இல்லை. கடந்த மூன்று வருடங்களாக கேரளா நீர்ப்பாசனத்துறை அணை பாதுகாப்பு காரணம் என்று கூறி சிறுவாணி அணை முழு கொள்ளளவு அடைய அனுமதிப்பதில்லை. அதிலும் குறிப்பாக கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அணையிலிருந்து அதிகப்படியான நீரினை சிறுவாணி ஆற்றில் திறந்துவிட்டு அணையின் நீர் மட்டத்தை மிக கணிசமாக குறைத்துள்ளது.

தற்போது அணையில் நீர்மட்டம் குறைந்த காரணத்தினால் சிறுவாணி அணையிலிருந்து குகைவழிப்பாதை வழியாக நாளொன்றுக்கு வரும் நீரின் அளவு தற்போது மிகவும் குறைந்துள்ளது.தற்போது சிறுவாணியின் நீர்மட்டம் 19.97 அடியாக குறைந்துள்ளது. இதனால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக நாளொன்றுக்கு வழங்க வேண்டிய நீரின் அளவு 101 மில்லியன் லிட்டருக்கு பதிலாக 64 மில்லியன் லிட்டருக்கும் குறைவாகவே வழங்கி வருகிறது.

தற்போது ஒரு நாளைக்கு 64.15 எம்.எல்.டி. குடிநீர் எடுக்கப்படுகிறது. கோடை காலம் துவங்குவதற்கு முன்பே குடிநீர் வழங்கும் அளவு குறைக்கப்படுள்ளதால் இனி வரும் நாட்களில் கோவை மாநகராட்சி மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் அளவு குறைய வாய்ப்புள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து கோவையில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘ சிறுவாணி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக எடுக்கப்படும் நீரின் அளவை அதிகரிக்கவும், நீர்மட்டத்தை உயர்த்தவும் கேரளா அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட குழு வலியுறுத்தும்,’’ என்றார்.

மேலும் படிக்க