February 17, 2023 தண்டோரா குழு
கோவை, ஆவாரம்பாளையம், இளங்கோ நகர் கிழக்கு வீதிமில் வசிப்பவர் யுவராஜபாண்டியன். இவர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில் கோவையில் டி.எஸ். பேங்கிங் சோலியூசன் நிறுவனம் நடத்தி வரும் தினேஷ், தனக்கு இணைய வழி மூலம் வங்கியில் லோன் வாங்கி தருவதாக தன்னிடமிருந்து ஆதார்கார்டு, பான் கார்டு மற்றும் ஒடிபி விபரங்களை பெற்றுக்கொண்டு தன்னுடைய பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கி லோன் பெற்றுள்ளார் என கூறப்பட்டிருந்தது.
இந்த புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு தினேஷை இன்று 1 காவல் ஆய்வாளர் அருண், உதவி ஆய்வாளர் முத்து, சிவராஜ பாண்டியன் மற்றும் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் பயன்படுத்திய 8 செல்போன்கள், 26 சிம் கார்டுகள், 11 பான் கார்டுகள், 12 ஆதார், 1 வோட்டர் ஐ.டி மற்றும் சுமார் 6000 வாடிக்கையாளர் பற்றிய விபரங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மேலும் இது போன்று யாரேனும் பாதிக்கப்பட்டிருப்பின் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும்மாறு போலீசார் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.