February 18, 2023 தண்டோரா குழு
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் -இன் குறைந்த கட்டண துணை நிறுவனமான ஸ்கூட், அதன் நெட்ஒர்க் விரிவாக்க திட்டத்தை ஆதரிப்பதற்காக ஒன்பது புதிய எம்ப்ரேயர் E190-E2 விமானங்களை வாங்குவதற்கு, விமானக் குத்தகைதாரரான அசோரா உடன் ஒரு விருப்ப கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளது.
முதல் விமானம் 2024 இல் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது, மற்ற எட்டு விமானங்களும் 2025 ஆம் ஆண்டின் இறுதியில் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும்.E190-E2 ஐ இயக்கும் முதல் சிங்கப்பூர் விமான நிறுவனம் ஸ்கூட் ஆகும், இந்த விமானம், பிரேசிலிய விமான உற்பத்தியாளர் எம்ப்ரேயர் -இன் பிரபலமான பிராந்திய ஜெட் விமானங்களின் வரிசையில் சமீபத்திய மாடலாகும்.
இந்த விமானம், 112 பயணிகளை ஒற்றை-வகுப்பு கட்டமைப்பில் ஏற்றிச்செல்லும் திறன் கொண்டது. மேலும் ஐந்து மணிநேரம் வரை குறுகிய மற்றும் நடுத்தர பயண தூர பயணங்களுக்கு பயன்படுத்தப்படும். இது சிங்கப்பூரில் இருந்து மெட்ரோ அல்லாத இடங்களுக்கு குறுகலான வழித்தடங்களை வழங்கி ஸ்கூட்-இன் விமானக்குழுவில் உள்ள பெரிய ஏர்பஸ் ஏ 320 குடும்பம் மற்றும் போயிங் 787 விமானங்களை திறம்பட நிறைவு செய்யும்.
இந்த முதலீடு ஆனது, ஆசியாவில் விமானப் பயணத்திற்கான வளர்ந்து வரும் தேவையில் ஸ்கூட்-இன் நம்பிக்கையை வெளிப்படுத்திக் காட்டுகிறது மேலும் அது, அதன் பிராந்திய வலையமைப்பை மேம்படுத்துவதால், தேவைக்கு ஏற்ப கொள் திறனை சிறப்பாகப் பொருத்த அனுமதிக்கிறது. E190-E2 -இன் இந்த சேர்க்கையானது, சிங்கப்பூரின் முன்னணி விமான மையமாக இருக்கும் சிங்கப்பூரின் அந்தஸ்தை மேலும் வலுப்படுத்த உதவும்.
ஸ்கூட்-இன் தலைமை நிர்வாக அதிகாரி திரு. லெஸ்லி த்ங், “ஒன்பது புதிய E190-E2 விமானங்களை உள்ளடக்கிய ஸ்கூட்-இன் விமானக்குழுவை விரிவுபடுத்துவது நவீன மற்றும் எரிபொருள் திறன் கொண்ட விமானங்களை தொடர்ந்து இயக்க உதவுகிறது. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதே அருமையான விலையில் இன்னும் அதிகமான பயண வாய்ப்புகளை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை இது உறுதிப்படுத்துகிறது.
இந்தப் புதிய விமானமானது, பிராந்தியத்தில் நமது இணைப்பை மேம்படுத்துவதன் மூலம், ஸ்கூட், வளர்ச்சிக்குத் தயாராக இருப்பதை உறுதிசெய்து, நமது சிங்கப்பூர் மையத்தின் இந்த கூடுதல் வளர்ச்சியை ஆதரிக்கிறது.