• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வெள்ளிங்கிரி மலையேறும் பக்தர்கள் – பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் எடுத்துச்செல்ல ரூ.20 கட்டணம்

February 18, 2023 தண்டோரா குழு

வெள்ளிங்கிரி மலையேற பக்தர்களுக்கு நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் மலைக்கு செல்லும்போது பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்லும்போது ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பூண்டி அடிவாரத்தில் கடல்மட்டத்தில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் வெள்ளிங்கிரி மலை உள்ளது. சுமார் 5.5 கிலோ மீட்டர் தூரம் செல்லும் மலை பாதையில் வெள்ளை விநாயகர் கோயில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, சீதைவனம், அர்ச்சுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை போன்றவற்றை கடந்து சென்றால் 7வது மலையில் சுயம்பு லிங்கத்தை தரிசிக்க முடியும்.

கரடுமுரடான இந்த மலைப்பாதையில் பக்தர்கள் ஏறி தரிசனம் செய்ய ஆண்டுதோறும் மார்ச் முதல் ஏப்ரல் மாதம் வரை வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்படும். இந்நிலையில், மகா சிவராத்திரி என்பதால் நேற்று இரவு முதல் பக்தர்கள் மலையேற்றத்திற்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், மலையில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லவும், மலைப்பகுதியில் சமையல் செய்து அன்னதானம் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மலையேற்றத்தில் ஈடுபடுபவர்கள் தாங்கள் கொண்டு செல்லும் பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் பாட்டில்களை வனத்தில் வீசி விடுகின்றனர். இதனை தடுக்க மலையேற்றத்தில் ஈடுபடும் பக்தர்களிடம் இருந்து பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுக்கு ரூ.20 வசூலிக்கப்படவுள்ளது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது,

‘‘வெள்ளிங்கிரி மலையேற்றத்தில் ஈடுபடும் பக்தர்களை கண்காணிக்க ஷிப்ட் அடிப்படையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இரண்டாவது மற்றும் 6வது மலையில் வனத்துறையினர் பணி அமர்த்தப்படுகின்றனர். மலையேற்றத்தின்போது பக்தர்கள் எளிதில் தீ பிடிக்கும் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களை சோதனை செய்ய மலையடிவாரத்தில் வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நடப்பாண்டில் புதிய முயற்சியாக வனத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் வீசப்படுவதை தடுக்க மலையேற்றத்தின்போது பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்தும் நபர்களிடம் இருந்து ரூ.20 வசூலிக்கப்படும். இந்த தொகையை மலையேற்றத்திற்கு பிறகு கீழே இறங்கி வரும்போது பாட்டிலை காண்பித்து பெற்றுக்கொள்ளலாம். இதற்கு பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும்’’ என தெரிவித்தனர்.

மேலும் படிக்க